“கடல் தெரியாதவர் கடற்றொழில் சமாசத்திற்கு தலைவராக நியமனம் தீர்வு இல்லையேல் வீதிக்கு இறங்குவோம்”

“கடல் தெரியாதவர் கடற்றொழில் சமாசத்திற்கு தலைவராக நியமனம் தீர்வு இல்லையேல் வீதிக்கு இறங்குவோம்”

கடலே தெரியாதவர் கடற்றொழிலாளர்களின் உணர்வுகளை  புரிந்துகொள்ளாதவர் ஒருவர்  வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்திற்கு தலைவராக நியமிக்கபட்டுள்ளார். எனவே இது தவிர்க்கப்பட்டு  பொருத்தமான ஒருவர் சமாசத்தின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் இல்லையெனில் வீதிக்கு இறங்கி போராடுவோம் என வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவராக பொ.பிறேம்குமார் தெரிவு செய்யப்பட்டு முதல் சமாசம் சிறந்த முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தது. அவரது காலத்தில்தான் எமது சமாசம் வட மாகாணத்தில் சிறந்த கடற்றொழில் அமைப்பாக தெரிவு செய்யப்பட்டு விருதும் வழங்கப்பட்டது.

 அந்தளவுக்கு சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த நிலையில் தீடிரென கடந்த 27-11-2015 அன்று கூட்டுறவு ஆணையாளர் அவர்களினால் எமது சமாச தலைவர் பிறேமகுமார் அவர்களை விசாரணைகள் எதுவும் இன்றி, குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாது  தலைவர் பதிவியில் இருந்து நீக்கிவிட்டு புதிதாக மருதங்கேணி பிரதேச உதவி அரசாங்க அதிபர் கணகேஸ்வரனை வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு தலைவராக நியமித்திருக்கின்றார்கள்.

மருதங்கேணி கடலில் இருந்து யாழ் குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகத்திற்கு கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிந்து கடற்றொழிலாளர்கள் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்திருக்கின்றாhகள். அதனடிப்படையில் இப்பிரதேசத்தின் ஒட்டுமொத்த கடற்றொழிலாளர்களின் குரலாக ஒலிக்கின்ற வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசம் இந்த திட்டத்திற்கு தங்களது கடும் எதிர்பினை  பல இடங்களிலும் வெளிப்படுத்தி வந்தது.

அதன் தலைவராக இருந்து எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வு பாதிக்கப்பட கூடாது என்ற நிலையில் தலைவர் பிறேம்குமார் செயல்பட்டு வந்துள்ளார். எனவேதான் அவர் சமாசத்தின் தலைவராக இருந்தால் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது  போய்விடும் எனக் கருத்திய அரசியல் தரப்புக்கள் அவரை காரணமின்றி பதிவியிலிருந்து நீக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்க விடயம். எனவேதான் நாம் இதற்கு நியாயமான தீர்வினைகேட்டு நிற்கின்றோம் இல்லையெனில் வீதிக்கு இறங்கி போராடும் என வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள்  தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila