யாழில் கடத்தப்பட்ட எனது மகன் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார் என தயார் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்த சாட்சியமர்வில் லோகநாதன் பேரின்பராணி என்பவர் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எனது மகன் லோகநாதன் பிரதீபன் (கடத்தப்படுகையில் வயது 20) என்பவரை கச்சேரிக்கு அருகில் வைத்து 2008ம் ஆண்டு 4ம் மாதம் 26ம் திகதி 4 மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவத்தினரால் கடத்தப்பட்டார்.
மகனை தேடி நல்லூரடியில் உள்ள இராணுவ முகாமுக்கு சென்று இருந்தேன். அங்கு ரஞ்சித் என்பவர் என்னுடன் கதைத்தார். தாம் அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லை என கூறினார்.
அதன் பின்னர் நான் வீடு திரும்புகையில் இராணுவ முகாமினுள் இருந்து வெளியே வந்த மோட்டர் சைக்கிளில் இரண்டு இராணுவத்தினருக்கு இடையில் எனது மகனின் இரு கைகளும் பின் புறமாக கட்டப்பட்ட நிலையில் இருத்தி கொண்டு சென்றதை கண்டு கத்தினேன் . அவர்கள் வேகமாக அங்கிருந்து கொண்டு சென்றனர்.
பின்னர் கொழும்பில் எனது மகனை தடுத்து வைத்துள்ளார்கள் என அறிந்து கொழும்பு பூசா சிறைச்சாலைக்கு சென்றேன். சிறைச்சாலையில் எனது மகனின் விபரத்தை கூறி மகனின் புகைப்படத்தினையும் கொடுத்தேன்.

சிறிது நேரத்தில் என்னை அழைத்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் எனது குடும்ப விபரம் அனைத்தையும் கூறி மகன் எல்.ரி.ரி.ஈ தானே என கேட்டனர் நான் இல்லை என மறுத்தேன்.
சிறிது நேரத்தில் என்னை உள்ளே அழைத்து சென்று ஒருவரை காட்டி இது தானே உங்கள் மகன் என கேட்டனர். நான் இல்லை என கூறி எனது மகனின் விபரத்தை கூற அவர்கள் அழைத்து வந்த நபர் அம்மா உங்கள் மகன் எங்களுடன் தான் இருக்கின்றார் என கூற அவரின் தலையின் பின் புறம் அடித்து அவரை பேசவிடாது இழுத்து சென்றனர்.அத்துடன் என்னையும் பேசி கலைத்து விட்டனர்.
அதன் பின்னர் 2010ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு நாலாம் மாடியில் இருந்து கடிதம் ஒன்று எமது வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அக் கடிதத்துடன் அங்கு சென்ற போது காலையில் இருந்து மாலை வரை என்னை மறித்து வைத்திருந்தனர்.
அதனால் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் மயங்கி வீழ்ந்தேன். பின்னர் எனக்கு அங்கிருந்தவர்கள் முதலுதவி செய்து மகனை பற்றிய தகவல்களை கேட்ட பின்னர் உங்கள் மகன் தொடர்பில் காங்கேசன்துறை இராணுவ முகாமில் சென்று விசாரியுங்கள் என கூறி கடிதம் தந்தனர்.
அந்த கடிதத்தை வாங்கிகொண்டு காங்கேசன்துறை இராணுவ முகாமுக்கு சென்ற போது அங்கிருந்த இராணுவ அதிகாரி யாரைக்கேட்டு கொழும்பு போனீர்கள் யார் அங்கே போக சொன்னது என பேசி அக் கடிதத்தை கொண்டு தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து வாங்கி வாருங்கள் என கூறி அனுப்பினார்கள்.
தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கடிதத்தை கொடுத்தால் அவர்கள் அதனை வாங்கி வைத்துவிட்டு என்னை பேசி கலைத்து விட்டனர். என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
கடத்தபட்ட தந்தை சிறையில் இருந்ததை கண்டனர்.
கடத்தப்பட்ட தனது தகப்பன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார் என அவரது மகன் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளார்.
கொட்டடியை சேர்ந்த அன்ரன் சுதர்சன் என்பவர் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
தனது சாட்சியத்தில் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எனது தகப்பனார் ஆசிர்வாதம் அன்ரன் (கடத்தப்படுகையில் வயது 31) மண்டைதீவு கடற்பரப்பில் 1993ம் ஆண்டு 11ம் மாதம் 7ம் திகதி எமது பிரதேசத்தை சேர்ந்த மூவருடன் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த வேளை எனது தந்தையார் இருந்த படகின் மீது டோராவில் வந்த கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதன் போது தந்தையாருடன் படகில் இருந்த ஒருவர் காயப்பட்டு கடலில் வீழ்ந்தார். அதையடுத்து படகை சுற்றி வளைத்த கடற்படையினர் எனது தந்தையாரையும் படகில் இருந்த மற்றவரையும் தமது படகில் ஏற்றி சென்றனர்.
காயப்பட்டு கடலில் வீழ்ந்த தந்தையின் நண்பர் கடலில் நீந்தி கரை சேர்ந்தார். தந்தையுடன் கைது செய்யபட்ட மற்றையவரும் சில நாட்களின் பின்னர் விடுதலையாகி வந்திருந்தார் ஆனால் தந்தையார் பற்றிய தகவல் இல்லாமல் போனது.
பின்னர் கடந்த 2003ம் ஆண்டு காலபகுதியில் சிறைச்சாலையில் ஒன்பது பேர் உண்ணாவிரதம் என்ற செய்தி கொழும்பு பத்திரிகை ஒன்றில் வெளியாகி படமும் வெளியாகி இருந்தது. அதில் எனது தந்தையாரும் ஒருவர்.
அந்த படம் வெளியாகி சில காலம் கழித்து எமது வீட்டுக்கு யாழ்.நகரில் உள்ள 512 படைத்தலைமையகத்தில் இருந்து (பீல்ட் பைக்) மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவத்தினர் எனது தந்தையார் சிறையில் இருந்து தப்பித்து விட்டார் என கூறி வீட்டில் சோதனை இட்டதுடன் வீட்டிலும் விசாரணைகளை மேற்கொண்டானர்.
பின்னர் கடந்த ஒரு சில வருடத்திற்கு முன்னர் யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லீம் நபர் ஒருவர் எமது உறவினர் ஒருவரிடம் எனது தந்தையார் தன்னுடன் சிறையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த முஸ்லீம் நபரின் முகத்தின் இரு பக்கமும் அயன் பொக்ஸ்சால் சூடு வைத்த காயம் இருந்ததாகவும், அது சிறைச்சாலையில் வைத்து தனக்கு சித்திரவதை செய்ததால் ஏற்பட்ட காயம் என தன்னிடம் அந்த முஸ்லீம் நபர் கூறியதாகவும் அந்த உறவினர் தெரிவித்தார்.
அதன் பின்னர் தந்தையார் பற்றிய எந்த தகவல்களையும் பெற முடியவில்லை என தெரிவித்தார்.