எழிலன், இன்பருதி உட்பட பலர் இராணுவத்தினரிடம் ஒப்படைப்பு (பாதிரியார் முன்னிலையில் என பெண் பரபரப்பு சாட்சியம்)


தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான எழிலன், இன்பருதி, ராஜாமாஸ்டர் உட்பட நூற் றுக்கணக்கானோரை இலங்கை இராணுவத்திடம் பிரான்சிஸ் ஜோசப் பாதிரியார் ஒப்படைத்தது உண்மையே. அவர்களை இராணுவம் பஸ் ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றதனை நேரடியாக கண்டேன் என பெண் ணொருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்வு நேற்றுக் காலை ஒன்பது மணியளவில் பருத்தித்துறை பிரதேச செயலகத் தில் ஆரம்பமாகி நடைபெற்றது. ஷ
இதன் போதே விடுதலைப் புலி கள் உறுப்பினரான ரூபன் மாமா என அழைக்கப்படும் சுந்தரம் பிரேம தாசவின் மனைவி இவ்வாறு சாட் சியமளித்துள்ளார்.

புலிகள் உறுப்பினரான எனது கணவர் மற்றும் நான், பிள்ளைகள் ஆகியோர் போரின் இறுதிக்கட்டத் தில்  2009 ஆம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதியன்று வட்டு வாகல் பாலத்தின் ஊடாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு செல்ல முயன்றோம்.
அங்கு வயல்வெளி ஒன்றில் இருந்த போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஒரு நாள் இருந்தா லும் சரணடையுமாறு இராணுவம் அறிவித்தது. 

இதன் போது எம்மோடு பிரான் சிஸ் பாதரும் சில தளபதிகளும் நின்றி ருந்தார்கள். இதனையடுத்து பிரான் சிஸ் பாதர் இராணுவத்தோடு கதைத்து விட்டு, எனது கணவர் உட்பட எழி லன், இளம்பருதி, ராஜாமாஸ்டர், இன்பம் மற்றும் சில நூற்றுக்கணக் கானோரை இராணுவத்திடம் அழைத்து சென்றார்.
இவ்வாறு அழைத்து செல்லப் பட்ட சிலரின் குடும்பத்தினரும் இராணுவத்திடம் சென்றனர். அழைத்து செல்லப்படுவதற்கு முன் னர் பிரான்சிஸ் பாதர் தன்னோடு வருபவர்களின் பெயர்களையும் எழுதியிருந்தார். பின்னர் சரண டைந்தவர்களை இராணுவம் ஒரு பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்ற போது, இடையில் இளம்பருதியின் மாமியாரை பஸ்சிலிருந்து இறக்கி விட்டு ஏனையோரினை கொண்டு சென்றனர். 

பின்னர் இரு நாள் கழித்து இரு பதாம் திகதி எங்களை பஸ்ஸில் ஏற்றி ஆனந்தகுமாரசுவாமி முகா மிற்கு கொண்டு சென்று, ஐப்பசி இருபத்தி நாலாம் திகதி கரவெட்டி யில் கொண்டுவந்து விட்டனர்.
இது தான் பிரான்சிஸ் பாதர் தலைமையில் நடந்தது என்று இரு பிள்ளைகளின் தாயாரான அந்த குடும்ப பெண் இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற சம்பவங்களை விபரித் தார். 
பஸ்ஸில் சென்றவர்கள் எங்கே? ஏன் இளம்பருதியின் மாமியார் இறக்கிவிடப்பட்டார்? ஏனையவர் களை கொல்வதற்கா? என அவரது கேள்விகள் நீண்டு கொண்டே செல்கின்றது.  
குறித்த சரணடைவினை கண் ணால் கண்டவர்களில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட வெகு சிலரே கண்ணால் கண்ட சாட்சியங்கள் உள்ள நிலையில் இவரது சாட்சியம் நேற்றைய தினம் முக்கியத்துவம் பெற்றிருந் தது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila