வரலாற்றின் புனித கடமையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்: அறிவகத்தில் சம்பந்தன் அறைகூவல்

கிளிநொச்சி மாவட்டத்துக்கு நேற்றையதினம் விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கிளிநொச்சி கூட்டமைப்பின் பணிமனையான அறிவகத்துக்கு சென்றிருந்தார்.
இதன்போது அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கனடா ஒட்டாவா பழைய மாணவர்களின் அனுசரணையில் இடம் பெற்ற மரம் நடுகை விழாவிலும் அவர் கலந்து கொண்டார். அதன்பின்னர் கல்விச்சமூகத்தினர் கட்சி நிர்வாகிகள் ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவ்வுரையில், கடந்த 60 வருட கால இருள் மயமான அரசியல் சூழலிலிருந்து வெளிவரக்கூடிய ஒரு புற நிலை தென்படுகிறது. 2016ம் ஆண்டில் தீர்வு ஒன்றை அடையக்கூடிய வழிமுறைகளை நாங்கள் காண்கிறோம். அதற்காக முயற்சிக்கிறோம். அரசியல் யாப்பு உருவாக்கம் என்பது ஒரு வரலாற்றின் சந்தர்ப்பம் இதை நாம் சரிவரப்பயன்படுத்த வேண்டும். இந்த வருடத்தில் எங்களுடைய முயற்சிகள் வெற்றி பெறுமா? என்று சிலர் சந்தேகம் கொள்கிறார்கள். அவர்களுடைய சந்தேகங்கள் நியாயமானவை 60வருடங்களாக அவர்கள் கண்ட அனுபவங்களால் அவர்கள் அவ்வாறு சிந்திப்பதால் தவறேதுமில்லை. அதற்காக நாங்கள் முயற்சிக்காமல் இருக்கமுடியாது.
வரலாறு சந்தர்ப்பத்தை தந்திருக்கிறது. சர்வதேசமும் இதற்கான சாதக வாய்ப்புக்களை அளித்திருக்கிறது. இந்த வேளையில் நாங்கள் ஒன்று பட்டு ஒருமித்து
காரியங்களை ஆற்றவேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் புனிதக்கடமையாகும்.
எங்களிடையே பிரிவுகளை ஏற்படுத்த கருத்து பேதங்களை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். நாங்கள் வாய்ப்பை குழப்பமடையச் செய்யக்கூடாது.
சந்தர்ப்பத்தை தவற விட்டவர்கள் என்ற கதை உருவாகக்கூடாது. நாங்கள் தெளிவான தீர்வுத்திட்டத்தை கொண்டிருக்கிறோம். 2015ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் அதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
ஒற்றையாட்சிக்குள் 13வது சீர்த்திருத்தச்சட்டத்துக்கு என்ன நிகழ்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
எனவே தெளிவான தீர்வு பற்றிய கொள்கை எங்களிடம் இருக்கிறது. அதற்கான மக்கள் ஆணையும் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த விடயத்தில் தவறிழைக்க முடியாது.
வடக்கின் முதலமைச்சர் பேரவையில் இருப்பதால் குழப்பம் என்று சொல்கிறார்கள் நான் அவரை பூரணமாக நம்புகிறேன்.அவர் ஒரு நேர்மையான நீதியரசர் எனப்பெயர் பெற்றவர்.
சிறந்த ஆன்மீக வாதி தமிழ் மக்களின் வரலாற்றுச் சந்தர்ப்பத்தை சரிவரப்புரிந்து கொள்வார். அவர் ஒருபோதும் தவறிழைக்கமாட்டார்.
அவருடன் நான் இது தொடர்பில் மனம் திறந்து பேசியிருக்கிறேன். இன்னும் பேசுவேன் அவரும் அது தொடர்பில் விருப்பம் கொண்டவராக இருக்கிறார்.
அவருடைய ஆலோசனைகளையும் ஏனைய சிவில் சமூக அமைப்புக்களின் தீர்வு யோசனைகளையும் பெறுவோம் ஆராய்வோம்.
இறுதியில் எமது மக்கள் இதுவரை பட்ட துன்பங்களுக்கும் கண்ணீருக்கும் துரோகம் இழைக்காத தீர்வுத்திட்டம் ஒன்றை எமது கட்சியே முன்வைக்கும்.
அது எங்களுக்கு மக்களால் தரப்பட்டிருக்கும் வரலாற்றுக் கடமை அதனை நிறைவேற்றுவோம். அந்த புனிதக்கடமையில் ஒருமித்த தலைமைத்துவத்தின் கீழ் அணி திரள வேண்டும் என்று தெரிவித்தார்.
  • ரணிலின் கருத்தால் ஆவேசமடைந்த சம்பந்தன்

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila