இன்று காலை நடைபெற்ற கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மாவட்டச் செயலர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், இடம்பெயர்ந்துள்ளவர்களினது புள்ளிவிபர தரவுகளையும் முகாம்களில் வாழ்பவர்களின் தரவுகளையும் பெற்றுக் கொள்வதற்கான கூட்டமாகவே இக் கூட்டம் அமைந்திருந்து. இதன்போது பிரதேச செயலர் பிரிவு ரிதியாக இடம்பெயர்ந்தவர்களினதும் முகாம்களில் வாழ்பவர்களினதும் தரவுகள் வழங்கப்பட்டிருந்தன. அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளின் அடிப்படையிலும் குழுக்களை நியமித்து துல்லியமான தரவுகளை சேகரிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும் இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் எங்குள்ளன என்பது தொடர்பாகவும் விடுவிக்கப்படாதுள்ள தெல்லிப்பழை பிரதேசத்தின் அதியுச்ச பாதுகாப்பு பிரிவுக்குள் எத்தனை குடும்பங்கள் உள்ளனர் அவர்களுடைய காணிகள் எவ்வளவு போன்ற தரவுகளும் இக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இக் கூட்டத்தில் மேலதிக காணி விடுவிப்பு தொடர்பாக எதுவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் தற்போது இவர்களால் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலக பிரிவுகளில் உருவாக்கப்படவுள்ள குழுக்களினால் பெறப்படும் தரவுகளின் அடிப்படையிலும் அறிக்கை தயாரிக்கப்பட்டு அவை ஜனாதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதியே மேற்கொள்வார் என தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மாவட்ட அரச அதிபர்களால் கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்கும் இராணுவத்தால் வளங்கப்பட்ட புள்ளிவிபரங்களுக்குமிடையில் வேறிபாடுகள் காணப்படதனால், ஜனாதிபதியால், பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள காணிகளின் விபரங்கள் மீளக்குடியமர்வு மேற்கொள்ளப்பட பிரதேசங்கள் தொடர்பான விபரங்களை நேரில் சென்று பெற்று சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு விடுக்கப்பட்ட பணிப் அடிப்படையிலே நேற்றைய தினம் இக் கூட்டம் இடம்பெற்றிருந்தது. கூட்டத்தில் யாழ் மாவட்ட அரச அதிபர் யாழ் மாவட்டத்தின் முப்படை இராணுவ தளபதிகளும் பிரதேச செயலர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை இக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநர் பளிகக்கார வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் ஆகியோர் கலந்து கொள்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் பின்னர் அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டு அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை. |
பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் யாழ்.செயலகத்தில் முக்கிய கூட்டம்! - மீள்குடியமர்வு குறித்து ஆராய்வு
Add Comments