’வீடுகளில் புகுந்து திருடும் கொள்ளையர்களை தாக்குவது குற்றமாகாது’: வரலாற்று தீர்ப்பளித்த நீதிமன்றம்


வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க வரும் நபர்களை தடுத்து நிறுத்தி அவர்களை வீட்டு உரிமையாளர்கள் அடித்து உதைப்பது சட்டப்படி குற்றமாகாது என்ற நீதிமன்ற தீர்ப்பை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.பிரித்தானிய நாட்டில் தனி நபர் ஒருவரின் உயிருக்கு மற்றொரு நபரால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், தற்காப்பிற்காக அந்த நபரை தாக்குதவது குற்றமில்லை என்ற சட்டம் கடந்த 2013ம் ஆண்டு பொதுமக்களின் நலனிற்காக கடுமையாக்கப்பட்டது.
ஆனால், ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் நபர்களை எவ்வாறு தடுப்பது? அவர்களை தடுத்து வீட்டு உரிமையாளர்கள் தாக்கினால், அது குற்றமாகுமா? என்ற கேள்வி பொதுமக்கள் இடையே நிலவி வந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்று லண்டன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு டென்பி கோலின்ஸ்(39) என்ற நபர் Gillingham பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை 3 மணியளவில் கொள்ளையடிக்க சென்றுள்ளார்.
வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது நித்திரையில் இருந்து எழுந்த குடும்பத்தினர், டென்பியை கடுமையாக தாக்கிவிட்டு கட்டிப்போட்டுள்ளனர்.
தகவல் பெற்று வந்த பொலிசார், டென்பியை கைது செய்ய முயன்றபோது அவர் ஏற்கனவே சுயநினைவு இன்றி இருந்துள்ளார்.
மேலும், அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது ‘டென்பி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், அதில் இருந்து மீள வாய்ப்புகள் மிக குறைவு’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மகனின் நிலையை கண்டு ஆத்திரம் அடைந்த டென்பியின் தந்தை, தனது மகனை தாக்கிய குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தான் நேற்று லண்டன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் நபர்களை வீட்டின் உரிமையாளர் தாக்குவது சட்டப்படி குற்றம் இல்லை.
இதில் எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் இல்லை. ஒருவரின் தற்காப்பிற்காக எதிராளியை தாக்குவது மனித உரிமை மீறல்களில் எடுத்துக்கொள்ள முடியாது.
இதேபோல், ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயலும்போது, வீட்டு உரிமையாளரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இந்த நேரங்களில் கொள்ளையனை தடுக்க அவர் மீது தாக்குதல் நடத்துவது குற்றம் இல்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளனர்.
நீதிபதிகளின் இந்த தீர்ப்பை பிரித்தானிய நாட்டு சட்ட அமைச்சகம் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila