இந்தக் கட்டுரை வரைந்து கொண்டிருக்கும் போது நேற்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா சமஷ்டி ஆட்சி முறைக்கு இங்கு இடமில்லை என்று அறிவித்து விட்டார். இனி கட்டுரைக்கு வருவோம்.
இந்தியாவைப் பொறுத்த மட்டில் ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் ஈழதேசப் புலிகளை எந்த வகையிலும் அளிக்க வேண்டும் தமிழர்களையும் புலிகளையும் தனிமைப்படுத்த வேண்டும் என்ற ஆசை குறி நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இப்போதும் உள்ளது.
அதில் இந்தியா வெற்றியும் கண்டு விட்டது. ஆனால் தமிழ் மக்களையும் புலிகளையும் இந்தியாவால் பிரிக்க முடியாமல் போய் விட்டது.
ஈழதேசத்தில் இந்திய அமைதி காக்கும் படை ஆக்கிமிரப்புப் படையாக மாறிய காலம் தொட்டு வடக்கில் நந்திக்கடல் எல்லை வரை அமரர் ராஜீவ் காந்தியின் கொலைக்காக சுமார் மூன்று லட்சம் மக்கள் ஈழதேசத்தில் நரபலி கொடுக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும். துடிதுடிக்க கொல்லப்பட்டும் பல பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டும் அன்னை தேசத்தின் ஆத்திரம் தீரவில்லை கோபம் இன்னும் அடங்கவில்லை என்பது மட்டும் உண்மை.
இந்தியா பிரதமர் வாஜ்பாய்க்குப் பின்பு தமிழர் விடயத்தில் இந்தியா எந்தவொரு அக்கறையும் செலுத்தவில்லை. இந்திய வரலாற்றிலே இந்தியாவின் பொம்மை பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில்தான் ஈழதேசத்தின் மனிதப் பேரவலம் உச்ச கட்டத்தை அடைந்தது.
மன்மோகன் தனது 10 வருடகால ஆட்சியில் சோனியாவின் கைபொம்மையாகச் செயல்பட்டு ஈழதேசத்தில் மக்கள் தேசத்தை மனிதபடுகொலை தேசமாக மாற்றிய பெருமையை அடைகின்றார்கள்.
ஈழத்தவர்களுக்காக தாய்த் தமிழ்நாடு பொங்கியெழும் போதெல்லாம் இந்திய மத்திய அரசு சொல்லும் தாரகைமந்திரம் சிங்கள அரசு சீனாவிடம் நெருங்கிவிடும் சென்றுவிடும் அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்பதுதான்.
இப்போது மட்டும் இலங்கை அரசு சீனாவிடம் நெருங்கவில்லையா செல்லலில்லையா? இப்போது சிங்கள அரசு சீனாவையும் ஓரங்கட்டாமல் இந்தியாவையும் ஓரங்கட்டாமல் இரண்டு நாடுகளையும் இரண்டு கண்களாக பார்த்து வருகின்றது.
இரண்டு நாடுகளையும் பகைத்துக் கொள்ளாமல் இலங்கைக்குள் இந்தியாவின் நாட்டமைத் தன்மையை சமப்படுத்தும் நிலைமைக்குள் உள்ளது.
இந்த ஆண்டு தமிழர் தீர்வு கிடைக்குமாம் - சம்பந்தர் தெரிவிப்பு
இந்த ஆண்டுக்குள் தமிழர் தீர்வு பெற வேண்டும் பெற்று விடுவார்கள் என்று பகிரங்மாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் சம்பந்தர் இந்த அரசின் எதிர்கட்சித் தலைவர் என்ற போதிலும் அரசுடன் மிகவும் நெருங்கிச் செயல்பட்டு வருகின்றார்.
சம்பந்தரைப் பொறுத்த மட்டில் அரசுடன் முரண்டு பிடிக்காமல் கடின போக்கை கைவிட்டு அரசுடன் சேர்ந்து கொண்டு சமஷ்டியைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கி விட்டார். அந்த வகையில் தான் கடந்த வாரம் சம்பந்தர் லண்டன் பயணமாகியுள்ளார்.
சம்பந்தருடன் சுமந்திரன் எம்பியும் 2 நாள் கடந்து லண்டனில் இணைந்து கொள்கின்றார். இங்கிலாந்தின் ஒரு பகுதியாக தனி மாநிலமாக சமஷ்டி ஆட்சி நடத்தும் ஷ்கொட்லாந்தின் ஆட்சி அதிகாரங்கள் மற்றும் அங்கு நடக்கும் அரசு பற்றி ஆராய்வதற்காகவே சம்பந்தர் சென்றுள்ளதாக அறிய வருகின்றது.
ஆகவே தமிழர் தீர்வுப் பொதியாக சமஷ்டி ஆட்சியை தமிழர்களின் ஏகபிரதிநிதியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசிடம் முன்வைக்கப் போகின்றது.
இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிகள் செய்து வரும் நிலையில் அதற்கான யோசனைகளை தயாரிக்கும் முயற்சிகளில் தமிழ் தேசியக் சுட்டமைப்பு செயல்பட்டு வருகின்றது.
அரசியலமைப்பு மாற்றத்தின்போது அதியுச்ச அதிகாரப் பகிர்வான சமஷ்டி தீர்வை வலியுறுத்துவோம் என்று சம்பந்தர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
உலகில் சுவிஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகளில் சமஷ்டி ஆட்சிமுறைமை இருந்து வந்தாலும் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்தில்தான் அதியுச்ச சமஷ்டி ஆட்சி முறை இருந்து வருகின்றது.
தமிழர் தீர்வு சமஷ்டி என்றால் ஏற்றுக் கொள்ளக் கூடியதே
தமிழர்களைப் பொறுத்த மட்டில் தற்போதைய நிலையில் தமிழர் தரப்பு அரசியல் பேரம் பேசும் சக்தி அல்ல. பிரபாகரன் காலத்தில் டிமான்ட் காட்டி பயமுறுத்தி பெற்றிருக்க வேண்டியதுதான் இந்த சமஷ்டி. ஆனால் தமிழர்களின் ஒருமித்த கட்சியாக ஏகபிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது.
சமஷ்டி ஆட்சி என்பது அரை ஈழம் இந்த சமஷ்டியை அரசு வழங்கும் என்று எங்குமே அரசு சொல்லவில்லை. கூட்டமைப்புதான் இந்தக் கோரிக்கையை அரசிடம் முன்வைக்கவுள்ளது. அதனால் சிங்கள அரசு சமஷ்டியை கொடுக்குமா என்பது முதலாவது கேள்வி.
இந்த சமஷ்டி ஆட்சியை இந்தியா விரும்புகின்றதா? இந்தியா இந்த சமஷ்டிமுறை ஆட்சிக்கு ஆதரவு வழங்குமா? அல்லது ஜெனீவாவில் எப்போதும் வழமை போன்று காலை வாரிவிடுவது போன்று செய்யுமா? என்பது இரண்டாவது பலமான கேள்வியாக உள்ளது.
காரணம். சமஷ்டி ஆட்சியை வலியுறுத்துவோம் என்று சம்பந்தர் சொல்லிய மறுதினம் இலங்கைக்கான இந்திய தூதுவர் யஷ்வந்த் சிங்ஹா ஒரு பொடி வைத்து மறைமுகமாக ஒரு உரையாற்றல் செய்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பிலுள்ள இந்தியா ஹவுசில் இந்தியாவின் 67 ஆவது இந்தியக் குடியரசு தினநிகழ்வில் உரையாற்றிய சின்ஹா இலங்கையின் ஒற்றுமை இறைமை பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்க இந்தியா உறுதி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
உண்மையில் இந்தியாவைப் பொறுத்த மட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தையாவது அமுல்படுத்துமாறு இலங்கையை இந்தியா ஒரு நாளாவது கட்டாயப் படுத்தியதில்லை. இலங்கை மீது இந்தியா காட்டமாக நடந்து கொண்டதுமில்லை.
ஆனால் இந்திய அரசு சார்பாக எந்த அரசியல்வாதிகள் இலங்கை வந்தாலும் ஒரு ஊடக அறிக்கையை விட்டுச் செல்வார்கள். அதாவது தமிழர் தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விட்டுள்ளோம் என்று அந்த அறிக்கை அமைந்திருக்கும். இதுதான் கடந்த 10 வருடங்களைத் தாண்டி நடந்து கொண்டிருக்கின்றது.
பிரதமர் மோடிக்கு அறிவிப்பாராம் - ஜெய்சங்கர்
வடக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடியிடம் எடுத்துக் கூறுவதாக இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் அண்மையில் கொழும்பு வந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.
அப்படியானால் ஈழத் தமிழர் பிரச்சினை மோடிக்கு இன்னும் தெரியாதா? மோடி என்ன வானத்திலிருந்து இப்போதுதான் பூமிக்கு வந்துள்ளாரா? இனிமேல்தான் மோடிக்கு ஈழத் தமிழர் பிரச்சினையைத் தெரியப்படுத்தப் போகின்றாரா?
இந்த செயலர் ஜெய்சங்கர் என்பவர் இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப் படையினர் காலத்தில் கொழும்பிலுள்ள இந்திய தூதுரகத்தில் கடமையாற்றிய றோ அதிகாரி என்பதுடன் இலங்கைப் பிரச்சினை பற்றி 30 ஆண்டு காலங்களாக நன்கு அறிந்தவர். தேர்ச்சி பெற்றவர்.
ஈழத் தமிழர் பிரச்சினை என்பது உலக அரங்குகளில் பேசப்படுகின்ற ஒரு பாரிய பிரச்சினை. அப்படிப்பட்ட பிரச்சினை இன்னும் மோடிக்குத் தெரியாதா? அல்லது மோடியைச் சுற்றியுள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் றோ அதிகாரிகள் மோடிக்கு ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எவும் பேசுவதில்லை என்பதும் மோடியும் அதுபற்றி அறிந்து கொள்ள விரும்பவில்லை என்பதும் இங்கு சான்றாகின்றது.
இந்தியாவின் முழு நோக்கம் இலங்கையில் இருந்து சீனா ஓரங்கட்டப்பட வேண்டும் இலங்கைக்குள் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு இலங்கைக்குள் இருந்து எவ்விதமான அச்சுறுத்தலும் வந்துவிடக் கூடாது.
அந்த வகையில் ஈழத் தமிழன் எக்கேடாவது கெடட்டும் என்பதே இந்தியாவின் குறி.
முஸ்லிம் காங்கிரசுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது ஏன்?
இந்திய ஆக்கிரமிப்புப் படை வடகிழக்கில் வந்தவுடன் முதன் முதலாக செய்த வேலை முஸ்லிம் காங்கிரசுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி தமிழ் அமைப்புக்களுடன் முஸ்லிம்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்ததுதான். தமிழர்களையும் முஸ்லிம்களையும் பகைமையாக்கியது. முஸ்லிம் தமிழ் உறவில் விரிசலை உருவாக்கியது.
1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த இரண்டு சாராரும் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. காரணம் சிலருக்கு அரசியல் செய்ய வேண்டுமானால் தமிழ் முஸ்லிம் முரண்பாடு கட்டாயத் தேவையாகக் கருதப்பட்டது.
இப்போதும் சிலருக்கு அரசியல் செய்ய வேண்டுமானால் தமிழ் முஸ்லிம் முரண்பாடுகள் நிரந்தரமான தேவையாக உள்ளது. விசேடமாக முஸ்லிம்களையும் தமிழர்களையும் அரசியல் ரீதியாக பிரித்தாழ்வதில் முஸ்லிம் காங்கிரஸ் குறியாகவுள்ளது.
இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் தரப்பின் வடகிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் சம்மதிக்குமா என்பதும் இங்கு மூன்றாவது கேள்வியாகவுள்ளது.
கடந்த காலங்களில் சந்திரிகா மஹிந்த ஆட்சிக் காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்கு விரோதமான பல மசோதாக்களில் அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது. கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பல பாதகங்களை ஏற்படுத்தும் பல சட்டமூலங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு அளித்து வந்துள்ளது.
ஆனால் அப்படியான சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று சம்பந்தர் முஸ்லிம் காங்கிரசிடம் கெஞ்சாத குறையாக கெஞ்சியுள்ளார். சம்பந்தரின் எந்தவொரு கோரிக்கையையும் ஹக்கிம் தரப்பு ஏற்றுக் கொண்டதில்லை.
அதற்கான காரணமாக முஸ்லிம் தரப்பு சொல்லுவது தமிழ் தரப்புடன் இணைந்து பயணிக்க முடியாது அரசியல் செய்ய முடியாது என்று அன்று தொட்டு இன்றுவரை சொல்லி வருகின்றார்கள்.
மாகாண அதிகாரிகளால் முஸ்லிம்கள் புறக்கணிப்பு
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் மாகாணத்தை விட்டுச் சென்ற பின்பு தொட்டு கிழக்கு மாகாணம் பிரியும் வரை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஊழியர்கள் மாகாண அரச சிலதமிழ் அதிகாரிகளால் மிக அதிகமாக புறக்கணிக்கப்பட்டார்கள் பந்தாடப்பட்டார்கள் என்ற பலமான வரலாறுகள் குறற்ச்சாட்டுக்களாக உள்ளது.
சுமார் 25 வருடங்கள் கிழக்கு மாகாணத்தில் சாதாரணமாக ஒரு சாதாரண சிற்றூழியர் நியமனம் பெறவோ அல்லது ஒரு இடமாற்றம் பெறவோ முடியாத நிலைமை இருந்தது. சில தமிழ் அதிகாரிகளின் இந்த மாற்றாந் தாய் பாகுபாடு மிக அதிகமாக இருந்தது.
இவைகளால்தான் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் விரிசல் அதிகரித்தது. அதன் பின்பு தமிழ் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் அதன் பி;ன்பு முஸ்லிம் ஊர்காவல் படையின் அட்டகாசம் என்று தமிழ் முஸ்லிம் விரிசலை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் தமிழ் முஸ்லிம் விரிசலுக்குள் இந்தியாவின் சதிவலை புதைந்துள்ளது பற்றி வெளியே பலருக்குத் தெரியாது.
கடந்த கிழக்கு ஆட்சியிலும் அரசுக்கு மு.கா ஆதரவளிக்க வேண்டாம் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து ஆட்சி அமைப்போம் முதலமைச்சர் பதவி தொட்டு சகல அமைச்சுக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துக் கொள்ளட்டும் என்று சம்பந்தர் ஹக்கீமிடம் மன்றாடினார்.
ஆனால் ஹக்கீம் எந்தவொரு அபிவிருத்தியும் இல்லாத தனது நீதி அமைச்சை அரசு பறித்து விடும் என்ற நோக்கில் சம்பந்தரின் கோரிக்கையை உதாசீனம் செய்து அரசுக்கு ஆதரவளித்தார் என்பது கறைபடிந்த வரலாறு இப்படிப்பட்ட நிலையில் தமிழ் தரப்போடு ஹக்கீம் ஒத்துழைப்பாரா? ஹக்கீமை நம்பலாமா?
(தொடரும்)-
எம்.எம்.நிலாம்டீன்
mmnilamuk@gmail.com