அரசியலமைப்பு மாற்றம் – வடக்கு மக்களின் விருப்பம் என்ன?
அரசியலமைப்பு மாற்றத்திற்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான வடமாகாணசபையின் குழு, மார்ச் மாதம் 17ம் திகதி தமது வரைபை நிறைவு செய்யும் என வடகமாகண முலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மாற்றத்திற்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக வட மாகாணசபையினால், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆகியோரின் கூட்டு தலைமையில் 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த குழு நேற்று (வெள்ளிக்கிழமை) கூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது வடமாகாண முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘குழுவில் நியமிக்கப்பட்ட 19 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் கூடி சில விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்திருக்கின்றோம். இதனடிப்படையில் வரலாற்று ரீதியான, அரசியல் ரீதியான மற்றும் அதிகாரப்பகிர்வு ரீதியான விடயங்களை ஆராய்வதற்கும், ஆய்வுகளை நடத்தவும், வரைபுகளை தயாரிக்கவும் 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி தமது வரைபுகளை தயாரித்து முடிக்கும். இதன் பின்னர் 24ம் திகதி எமது முழுமையான வரைபுகள் நிறைவு செய்யப்பட்டு மாகாணசபையில் விவாதிக்கப்படும். அதன் பின்னர் முன்பு திட்டமிட்டதைப்போன்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் ஊடாக அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கருத்தறியும் குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற முடிவை எடுத்துள்ளோம்.’ என்றார்.
Related Post:
Add Comments