
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் நாளை நடைபெறவுள்ள
ஆர்ப்பாட்ட பேரணியின்போது முதலமைச்சர் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகையோரின் கொடும்பாவி எரிப்பதற்காக இரகசிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளதாக இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வடமாகாணசபை அமர்விற்கு வருகைதரும் முதலமைச்சர்,விவசாய அமைச்சருக்கு கழிவோயில் வீசுவதற்கு விளையாட்டுக்கழக உறுப்பினர்களைக்கொண்டு சுமந்திரனணி முயற்சித்தபோதும் சுதாகரித்துகொண்ட விளையாட்டு கழக உறுப்பினர்கள் தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் அதனை நாம் முதல்நாளே அம்பலப்படுத்தியிருந்ததால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்திருந்தது.
வடமராட்சி கிழக்கில் அபிவிருத்தி தொடர்பில் அதிகாரிகள் கவனமெடுக்கவில்லை என்ற கருத்து பரவலாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் அதனை பயன்படுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் சிலரின் உள்நோக்கம் கருதிய திட்டத்துடன் அப்பகுதி மக்கள் வடமாகாணசபை விவசாய அமைச்சுக்கெதிராக திருப்பியிருந்தனர். இம்முறை ஒருபடி மேலே சென்று முதலமைச்சருக்கு எதிராகவும் அதனை பயன்படுத்தவும் ஆர்ப்பாட்ட வேளையில் ஒழுங்கமைக்கப்பட்ட சிலரை கொண்டு வடமாகாண முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் கொடும்பாவிகளை எரிப்பதற்கும் சுமந்திரன் தரப்பு திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் இரண்டாவது போராட்டத்தை நாளை நடாத்துவதற்கும் ஆர்ப்பாட்டத்திற்கு வடமராட்சி கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஒத்துழைப்பும் ஏற்கனவே பெறப்பட்டிருக்கின்றது என ஒன்றியத்தின் உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளதோடு இந்த போராட்டத்தை திசைதிருப்புவதை அனுமதிக்கமுடியாதெனவும் தெரிவித்தார். ஏற்கனவே கடற்றொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் சிலர் இந்த கடல்நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையை வாய்ப்பாக பயன்படுத்தி அதனை முதலமைச்சருக்கு எதிராக திசைதிருப்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த மாணவன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று முதல்கட்டமாக முன்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் தமிழரசுக்கட்சியின் அந்தபகுதி முன்னாள் பிரதேச சபை தலைவரும் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தனின் சகோதரருமான சஞ்சீவன் அவர்களும் வடமராட்சி கிழக்கு ஈ.பி.டி.பி அமைப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பிரதான பங்காளர்களாக இருந்ததும் போராட்ட இறுதியில் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் பெற்றுக்கொண்டதும் அப்போது ஊடகப்பரப்பில் பரவலாகப் பேசப்பட்டது.
அத்தோடு கடந்த மாகாணசபை தேர்தலில் பருத்தித்துறை நகரசபை தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான சபா ரவீந்திரன் அவர்கள் போட்டியிட இருந்ததாகவும் அதனை தடுத்து அண்ணனான சுகிர்தனுக்கு சுமந்திரனூடான சிபார்சில் வடமாகாணசபைக்கு வாய்ப்பு வழங்கியதாகவும் அப்போதே சபா ரவீந்திரன் அவர்கள் நெருக்கமானவர்களுக்கு தெரிவித்திருந்தார். அத்தோடு இரண்ரொரு மாதங்களில் உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறவிருப்பதால் தமக்கான வாய்ப்பை பெறுவதற்கு சுமந்திரனின் நகர்வுகளுக்கு முழுமையான ஆதரவை தெரிவிக்க வேண்டிய தேவையும் சுகிர்தனுக்கும் அவரது சகோதரருக்கும் இருக்கின்றது.
இதனை சரியாக பயன்படுத்த தீர்மானித்த சுமந்திரன் அண்மையில் உடுத்துறையில் பொதுஅமைப்பு பிரதிதிகளை அழைத்து கடல்நீரை நன்னீர் சுத்திகரிப்பு திட்டத்தில் சிக்கல்கள் இருப்பதாகவும் அதற்கு மக்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்து இரண்டு வாரங்களுக்குள் போராட்ட ஏற்பாடுகளை செய்யும்படியும் தனது சகாக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். (அவரது அந்த காணொளி)
அந்த உண்ணாவிரதத்தில் தமிழரசு கட்சியின் சுமந்திரனணி மற்றும் ஈ.பி.டி.பி இன் பங்களிப்பு என்ன?
மேலுள்ள படங்களில் உள்ளவை கடந்த ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் இதிலிருந்து சிலவற்றை நாம் விளங்கிகொள்ள வேண்டும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக மக்களை திசைதிருப்புவதும் உண்மையாக மக்களுக்குள்ள பிரச்சனையை எப்படி தமது அடுத்த அரசியல் நகர்வுகளுக்கு பயன்படுத்தும் கீழ்த்தர அரசியலையும் புரிந்துகொள்வதில் கடினமிருக்காது என நம்புகின்றோம்.
மக்களுக்குள்ள சரியான தேவைகள், அவர்களது கருத்துக்கள் விமர்சனங்களை சரியான வழியில் பெற்று அதனை முதலமைச்சருக்கு தெரியப்படுத்துங்கள் உங்கள் பிரதேச அபிவிருத்தியில் அக்கறையுடைய பொதுஅமைப்பு பிரதிநிதிகளை ஒன்றுதிரட்டி வடமாகாண முதலமைச்சர் , த.தே.கூட்டமைப்பு மற்றும் அரச அதிகாரிகளை சந்தித்து உங்கள் பிரச்சனைகளை எடுத்துரையுங்கள். வடமராட்சிமண் கடந்த உரிமைப்போராட்டத்தில் எத்தனையோ தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் உரியமண் அந்த மண்ணிலிருந்து எந்த துரோக செயல்களுக்கும் உடந்தையாகிவிடாதீர்கள்.
உங்கள் எதிர்ப்புகளை அகிம்சைரீதியில் தெரிவியுங்கள் அதனை சிலர் தமது தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கு பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள் என்று உரிமையோடு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
அன்பான அரசியல்வாதிகளே!
ஆனால் திட்டம் நடைமுறைப்படுத்துவதில் அப்பகுதி பொதுமக்களின் கருத்துக்கள் அதனால் ஏற்படுமெனசொல்லப்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பில் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை விளக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் வடமாகாணசபைக்கு உண்டு என்பதோடு அவ்வமைப்பு பிரதிநிதிகளை வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாட்டினையும் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
அதைவிடுத்து அவர்களை மேலும் தூண்டி அதனால் தமது அடுத்த உள்ளூராட்சி தேர்தலுக்கான ஆசனத்தை பெறுவதற்கும் அடுத்த அமைச்சு பதவியை நோக்கியதான சுமந்திரனின் சிபார்சுக்காக செய்யாது உண்மையில் வாக்களித்த மக்களுக்கு உண்மையுள்ளவர்களாக ஒட்டுமொத்த முதலமைச்சருக்கு கட்டுப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களாகவும் சமூக சேவகர்களாகவும் இருக்க வேண்டுமென்பதே சதாரண பொதுமக்களின் விருப்பமாகும்.