நீண்டகாலம் சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ள இந்தநேரத்திலே தமிழ் மக்களும் தங்களின் உரிமைகளிற்காக ஐனநாயகரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
வலிவடக்கிலே சிறிலங்கா அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி நலன் புரிமுகாம்களில் வசிக்கும் இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியிலும் இன்று காலை சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்களின் சமகால அவசர நிலமைகளையும் நெருக்கடிகளையும் புறந்தள்ளி நல்லாட்சி அரசாங்கத்தை நெருக்கடிகள் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு விவசாய நிலங்களில் வெட்டுக்களிகளின் தாக்கம் தொடர்பில் ஐனதிபதிக்கு கடிதம் அனுப்பியது தொடர்பில் தமிழ் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்
வடக்கு கிழக்கிலே காணாமல் போனோரின் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் அலையும் அவலம் தொடர்கின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நில ஆக்கரமிப்புக்கள் வடக்கு கழக்கிலே அதிகரித்த இராணுவ பிரசன்னம் என்று தமிழர் முன் மிக முக்கியமான பிரச்சனைகள்பரந்து கிடக்கின்ற இந்தநேரத்திலே மக்களுடன் இணைந்து ஐனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஐநாதிபதி மத்திரிபாலா சிறிசேனாவுடன் இணைந்து வெட்டுக்கிளி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்று மக்கள் மத்தியில் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுத் தொடங்கியுள்ளது.