மாணவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்யவா பராளுமன்றம் அனுப்பினோம்

Yoharajan .Nதொழில்நுட்பவியல் கல்லூரி மாணவர்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்யவா திருமதி விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சரை எமது மக்கள் பாராளுமன்றம் செல்ல வாக்களித்தனர்
யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் திரு.நா.யோகராஜன் அவர்களின் பல தசாப்தகால ஊழல்கள் மற்றும் முறையற்ற மோசடியான நிர்வாகத்தை அறியாத எந்த ஒருவரும் எந்தவெரு மூலையிலும் இல்லாது இருக்கின்ற இந்த காலகட்டத்தில், எமது கௌரவ முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன், கௌரவ சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் கடுமையான முயற்சியினாலும், கல்விச் சமூகம் இவ்வாறு சீரழிந்துபோவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற ஒரே காரணத்திற்காக ஏனைய வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடனும் இப்பணிப்பாளர் இரண்டாவது தடவையாகவும் 26.02.2016 தொடக்கம் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு இணங்க இடமாற்றப்பட்டிருந்தார்.
ஆனால் இவ் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு இணங்கிய இடமாற்றம் இராஜாங்க அமைசராகிய திருமதி விஜயகலா மகேஸ்வரனின் அழுத்தத்தின் பேரில் மீண்டும் இடமாற்றம் அமுல்படுத்தப்படுவதில் இருந்து இடைநிறுத்தப்படுவதை மாணவர் சமூகத்தினராகிய நாம் வன்மையாக எதிர்பதுடன், பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தினர், உயர் தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவர் ஒன்றியத்தினர், யாழ் தொழில்நுட்பப் பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகிய உங்களையும் இதற்கு எதிராக உரத்துக் குரல் கொடுக்குமாறு வேண்டி நிற்க்கின்றோம்.
இங்கணம்
தொழில்நுட்பவியல் கல்லூரி
மாணவர் சமூகம்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila