அரசியல் கைதிகள், காணாமல் போனோர் குறித்த பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் நாடாளுமன்றில் இன்று முன்வைத்தார். இதன்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியில் கைதிகள் மீது சட்டத்திற்கு உட்பட்ட வகையில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாதவர்கள் விடுதலைச் செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன் காணாமல் போனோர் குறித்து நீண்ட விளக்கம் கொடுத்த சம்பந்தர், ஐ.நா மற்றும் சர்வதேச சட்டங்கைளச் சுட்டிக்காட்டி இலங்கையில் காணாமல் போனோர் மற்றும் அவர்களது குடும்பங்கள் படும் துன்பங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
Related Post:
Add Comments