அத்துடன், கீரிமலை – சேந்தாங்குளம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சொந்தமான நான்கு பரப்புக் காணியை ஏற்கனவே தமது பாதுகாப்புத் தேவைக்காக தருமாறு கடற்படையினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால் அந்தவேண்டுகோள் மக்களால் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் அக்காணியைச் சுவீகரிக்கும் நோக்கில் எதிர்வரும் 8ஆம் திகதி அக்காணி அளவீடு செய்யப்படுமென கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
யாழ்மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்புப் படையினருக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமிருந்தபோதிலும் மக்களின் எதிர்ப்புக்கள் காரணமாகவும், ஆட்சி மாற்றம் காரணமாகவும் ஓரளவு ஓய்ந்திருந்தன. ஆனால் தற்போது அவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அண்மையில் பலாலி விமானத்தளத்தை விஸ்தரிக்கும்நோக்கில் காணிகள் அளவீடு செய்யப்பட்டதால் வலி. வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் இதனை நிறுத்துமாறு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எவ்வாறாயினும், கீரிமலை – சேந்தாங்குளம் பகுதியில் இருக்கும் தேவாலயத்திற்குச் சொந்தமான 4 பரப்புக் காணியும் எதிர்வரும் 8ஆம் திகதி அளவீடு செய்யப்படும் என நிலஅளவைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.