யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவொன்றை யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி எஸ்.ஜ சிறிகஜன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர். இக்கைது சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 22ஆம் திகதி யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரிக்கு கிடைக் கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றையடுத்து இக் கொள்ளை கூட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் கொள்ளையிட்ட பொருளொன்றை வேறொரு வருக்கு விற்பதற்காக முயற்சித்த போதே கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சம்பவத்துடன் தொடர்புபட்ட ஓர் பெண் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி குருநகரை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர். கொழும்புத்துறையை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஆகிய மூவருமே மேலதிகமாக கைது செய்யப்பட்டவர்களாவர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கடந்த 15ஆம் திகதி சில்லாலை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 12பவுண் நகைகளையும் இரண்டு விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகளையும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆவணங்களையும் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் கோப்பாய் பகுதி யிலுள்ள வீடொன்றில் இருந்து விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் இரண்டையும் மடிக் கணணி மற்றும் கையடக்க தொலைபேசிகளையும் திருடியுள்ளமையும் அதனைவிட வேறு இடங்களில் இருந்தும் கைதொலைபேசிகளை திருடியமையும் விசாரணைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக் கொள்ளை குழுவால் கொள்ளையடிக்கப்படுகின்ற நகைகளை கைது செய்யப்பட்ட பெண்ணே வங் கிகளில் அடகு வைத்து கொடுப்பதாகவும் அத்துடன் கொள்ளை சம்பவங் களுக்கு இவர் உடந்தையாக செயற் பட்டுள்ளமையும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி எஸ்.சிறிகஜன் தெரிவித்துள்ளார்.