எமது ஆயுதப் போராட்டம் நியாயமானதே : சம்பந்தன்
ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை நியாயம் என்ற காரணத்தினாலேயே, தமிழர்களது பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்த்துவைப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவரிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- ”எமது ஜனநாயக போராட்டம் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எமது விடுதலையை வலியுறுத்தி நியாயமான வழியில்தான் சகல போராட்டங்களும் இடம்பெற்றன. நாம் சாத்வீக ரீதியில், பேச்சுவார்த்தை மூலமாக, ஜனநாயக ரீதியில் எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு கடும் முயற்சிகளை கடந்த காலங்களில் எடுத்தோம். தந்தை செல்வநாயகம் அவர்கள், இவ்வாறு எல்லா விடயங்களிலும் பல முயற்சிகளை எடுத்தார். அது தோல்வியடைந்த காரணத்தால்தான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது” என்றார்.
Related Post:
Add Comments