மழை வெள்ளம் – பேரவலத்தில் கொழும்பு : ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பாதிப்பு

05adb0c0-dd63-4b60-a531-79ebfd7b150e

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், கொழும்பில் ஒரு இலட்சத்து, 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் ஒரு இலட்சம் பேர், 101 தற்காலிக இடைதங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கொலன்னாவ. கடுவளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் அங்கு வாழ்ந்து வந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், கொழும்பின் களனி, கொலன்னாவை, வெல்லம்பிடிய உள்ளிட்ட பல பகுதிகளின் நிர்மட்டம் உயர்ந்து காணப்படுவதனால், மக்கள் தொடர்ந்து தங்கியிருக்க முடியாத நிலையில் இடம்யெர்ந்துள்ளதுடன், பல மக்கள் வெளித்தொடர்பற்றுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன், பொலிஸார், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகள், கோயில்கள், பள்ளிவாயல்கள், பௌத்த விகாரகைள் உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சமைத்த உணவு, சுகாதார வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடிப்பதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் முப்படையினர் உட்பட மீட்புக் குழுவினர் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர். கனளி ஆறு பெருக்கெடுத்துள்ளமைக் காரணமாகவே அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், தற்போது ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ரணில் விக்கரமசிங்க, நாடாளுமனற் உறுப்பினர் மரிக்கார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோசி சேனாநாயக்க, அஸ்வர் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், ஆறுதல் தெரிவித்தனர்.

05adb0c0-dd63-4b60-a531-79ebfd7b150e 303d535f-d367-4f83-9989-a54bd5db652f 1739607c-eda5-43d0-9cc2-68e28abb5253 ab2309b7-bf12-4573-bab4-cc5a4eadd28e c2b93417-05ab-4c64-ad4b-53619d7f7587
00302.MTS.Still001 00302.MTS.Still002 00302.MTS.Still003 00302.MTS.Still005 00302.MTS.Still006
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila