அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழில் உள்ள ஐ.நா கிளை அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.கோவில் வீதியில் உள்ள அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு அரசியல் கைதிகளின் உறவினர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இருவருட அவகாசம் கேட்கிறீர்களா, அரசியல் கைதிகள் அனைவரும் உடனடி விடுதலை செய்யவேண்டும்,அரசியல் கைதிகள் சிறைக்குள் நடாத்தும் உண்ணாவிரதப் போராட்டம் நியாயமானதே அவர்களை உடன் விடுதலை செய், உலகுக்கு நல்லாட்சி வேடம் தமிழருக்கு கொடுங்கோலாட்சியா, சிறைவாழ்வு தான் தழிழருக்கு நிரந்தரமா,சர்வதேசமே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அழுத்தும் கொடுக்க வேண்டும் என்று வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்
.
மேலும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.