பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள மொசாக் பொன்சேகா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட நிதி பதுக்கல் தொடர்பிலான பனாமா இரகசிய ஆவணங்களில் உள்ளடங்கியுள்ள இலங்கை நிறுவனங்கள் மற்றும் இலங்கையுடன் தொடர்புடைய முகவர்கள் உட்பட சுமார் 60 இற்கும் அதிகமானோரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இரகசியமான முறையில் சேகரிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் சட்டவிரோதமான பணச் சலவையில் ஈடுபடுவது தொடர்பிலான ஆதாரங்களை அண்மையில் ‘ஜோன் டோய்’ என்கின்ற ஜேர்மனியை தளமாக கொண்டு வெளிவருகின்ற ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது. குறித்த ஆவணங்களில் உலகின் சக்தி வாய்ந்த பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் செல்வந்தர்களின் பெயர்கள் உள்ளடங்கி இருந்தமையினால் சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற நிலையில், இலங்கையர்கள் பலரின் பெயர்களும் உள்ளடங்கி இருப்பதான செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையிலே தற்போது சுமார் 60 க்கும் மேற்பட்ட இலங்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் https://offshoreleaks.icij.org , https://offshoreleaks.icij.org என்ற இணைய முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக பார்வையிட முடியும். என்பதுடன், பனாமா மோசடியில் ஈடுபட்டுள்ள இலங்கை முகவர்கள் குறித்த தகவல்களை கீழுள்ள இணைப்பில் பார்வையிடலாம்.