தன்னாட்சி கோரிக்கைக்கு முழுமையான ஆதரவு!
போர்க்குற்ற விசாரணை மற்றும் தமிழின அழிப்பிற்கு நியாயம் கோரியும், சுயாட்சி கோரியும் போராடும் ஈழத் தமிழர்களுக்கு என்றும் ஆதவராக செயற்படுவதாக பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுதினம் இலங்கை உட்பட சர்வதேச நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், அதனை முன்னிட்டு நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள காணொளி பதவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளிப் பதிவில் தொடர்ந்து குறிப்பிட்ட அவர், முள்ளிவாய்க்காலின் ஏழாவது ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்கின்ற நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் உயிரிழந்ததோருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழந்த அனுதாபங்களையும் தெரித்தார். அத்துடன், உண்மையையும், நீதியையும், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், தன்னாட்சி உரிமையையும் கோரும் தமிழர்களுக்கு தான் உறுதுணையாக இருப்பதாகவும் கூறினார்.
Related Post:
Add Comments