தமிழ் கிராமங்களை புறக்கணிக்கும் கிழக்கு முதலமைச்சர் – கோடீஸ்வரன்!


கிழக்கு மாகாணத்தில் ஆட்சி நிலவ வேண்டுமென எமது கட்சி முஸ்லிம்க ளுக்கு கிழக்கு முதலமைச்சர் பத வியைக் கொடுத்தனர். ஆனால் அந்த முதலமைச்சர் முஸ்லிம் பிரதே சங்க ளை அபிவிருத்தி செய்து கொண்டு தமிழர் பிரதேசத்தை புறக்கணித்து வருகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். அம்பாறை வீரமுனையில் 232 அப்பாவித் தமிழ் மக்கள் சிங்கள, முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட 27 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவர்களை நினைவுகூரும் முகமாக வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜையும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் உரையாற்றுகையில், இந்தப் படுகொலையை செய்வதற்காக மாற்று இனத்தவர்களை தூண்டி விட்டு அவர்கள் மூலம் எமது தமிழ் மக்களின் உயிர்களை பறித்து எமது இனத்தினை அடியோடு இல்லாமல் செய்து விடலாம் என்ற சிந்தனையிலே இப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்றது. 

இன்றும் எமது இனத்திற்கான நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறவில்லை அதனால் தங்களுக்கான சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாதவர்களாகவே எமது மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள். 

கிழக்கு மாகாணத்திலே ஆட்சி நிலவ வேண்டும் என்று எமது கட்சியினர் முஸ்லிம்களுக்கு முதலமைச்சரைக் கொடுத்தார்கள் ஆனால் இன்று அந்த முதலமைச்சர் சரியான பார்வையுடன் செயற்படவில்லை. 

 எமது தமிழ் கிராமங்களை புறக்கணித்து நடக்கும் நிகழ்வுகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அன்று எப்படி எமது இனத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்தார்களோ அதே போன்று தான் இன்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆட்சியாளர்கள் செய்து வருகின்றார்கள். 

 இந்த கிழக்கு மாகாணத்திற்கு சிறந்த தமிழ் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும். அந்த தமிழ் தலைமைத்துவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் உருவாக்கப்பட வேண்டும். 

இனிவரும் காலங்களில் கிழக்கில் முதலமைச்சராக வருபவர் தமிழ் முதலமைச்சராக வரவேண்டும் அவ்வாறு வரும் போது தான் தமிழ் மக்களினது வலி தொடர்பாக சரியான முறையில் உணர்ந்து சரியான அபிவி ருத்திகளை முன்னெடுத்து செல்ல வாய்ப்பு ஏற்படும் ஆகவே தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சாதிக்க வேண்டுமென அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila