சிறீலங்காவில் நிலவி வரும் மோசமான காலநிலையால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், தண்ணீர் சுத்திகரிப்பு வில்லைகள், படகுகள் போன்ற அவசர உதவிகள் தேவைப்படுவதாக சிறீலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தும் மக்கள் வெளியேறவில்லை எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை அழைத்து விசேட கூட்டமொன்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இதில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெளிவுபடுத்தியதுடன், அனர்த்தம் தொடர்பிலான துல்லியமான விபரங்கள் எதுவும் தற்போது கணிக்கமுடியவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.