விமர்சனங்களுக்கான சர்ச்சையைத் தீர்த்தார் வட மாகாண ஆளுனர்
வடமாகாண சபை தொடர்பாக விமர்சனங்களை தான் முன்வைக்கவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேரில் கூறியிருக்கும் வடமாகாண ஆளுநர், கொழும்பில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பின் ஒலிப்பதிவினையும் முதலமைச்சருக்கு வழங்கியுள்ளார். வட மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து மீளப்பெறப்பட்ட 3 அமைச்சுக்களை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்தே ஆளுநர் தனது ஒலிப்பதிவு அடங்கிய இறுவட்டை முதலமைச்சருக்கு வழங்கினார். வடமாகாண சபை தொடர்பாக ஆளுநர் ரெஜினோல்ட் குரே கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தாம் சர்ச்சையை உருவாக்கும் வகையில் பேசவில்லை என ஆளுநர் மறுத்துள்ளதுடன், நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் சந்திப்பின் ஒலிப்பதிவு அடங்கிய இடுவட்டை வடமாகாண சபைக்காக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கையளித்திருந்தார். இந்நிலையில் இன்று இறுவட்டைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர், தாம் முன்னதாகவே ஆளுநர் ஒரு சிறந்த மனிதர் சில புரிந்துணர்வுகள் இல்லாமையினாலேயே இந்த பிரச்சினை வந்துள்ளதாக தமது அலுவலர்களுக்கும், ஊடகங்களுக்கும் கூறியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
Add Comments