புதுக்குடியிருப்பில் 527 ஏக்கர் காணிகளை இராணுவம் கோருகிறது!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 13 இடங்களில் சிவில் பாதுகாப்பு படையினருக்கான பண்ணைகள் மற்றும் இலவச கல்வி நிலையம் ஆகியவற்றை அமைப்பதற்காக 527 ஏக்கர் நிலத்தை சிவில் பாதுகாப்புப்படை கோரியிருக்கும் நிலையில், காணி கோரல் தொடர்பாக பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளிலுள்ள சுமார் 527 ஏக்கர் அரச நிலத்தை சிவில் பாதுகாப்புப்படையினர் தமது பண்ணைகளை அமைப்பதற்கும், இலவச கல்வி நிலையங்களை அமைப்பதற்கும் தேவை என கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதேபோல்டிபுதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குள் மேலும் ஒரு தொகுதி அரச காணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அரச காணி பங்கீட்டில் முறைகேடுகள் நடப்பதாகவும், மிக பெருமளவு நிலத்தை சிவில் பாதுகாப்பு படையினருக்கு வழங்க முடியாது எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட, மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அரச காணிகள் பங்கீடு தொடர்பில் சில குழப்பங்கள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனியாருடைய வியாபார நடவடிக்கைகளுக்காக ஒரு தொகுதி நிலம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக பிரதேச மட்ட காணி பயன்பாட்டு குழுவில் மக்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பின்னரும் அந்த காணி பங்கீடுட்டு நடவடிக்கை அடுத்தகட்டத்திற்கு அதாவது மாவட்ட காணி பயன்பாட்டு குழுவுக்கு சிபார்சு செய்யப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக மக்கள் எமக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகளை செய்திருக்கின்றார்கள். மேலும் சிவில் பாதுகாப்புப்படையினர் ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 527 ஏக்கர் நிலத்தை தங்களுடைய தேவைகளுக்காக கோரியுள்ளனர்.
நாங்கள் முன்னதாகவே படையினரை வெளியேற்றவேண்டும். சிவில் நிர்வாகத்தில் படையினருடைய தலையீடு நிறுத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இவ்வாறு ஒட்டுமொத்தமாக 527 ஏக்கர் காணியை மேலதிகமாக வழங்க முடியாது.
அதனை நாங்கள் நிச்சயமாக எதிர்ப்போம். இந்த விடயம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் குறித்த விடயம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்படும் பட்சத்தில் அதனை நாங்கள் நிச்சயமாக எதிர்ப்போம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மக்களுக்கு இருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான நிலம் தேவையாகவுள்ள நிலையில் அரச காணிகளை கண்மூடித்தன மாக பகிர்ந்தளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila