வடக்கு மாகாண சபையில் சர்ச்சையை ஏற்படுத்திய வலம்புரி பத்திரிகையில் வெளியாகியிருந்த செய்தியினை தான் வழங்கியதாக பகிரங்கமாக தெரிவித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் கன கரத்தினம் விந்தன், இதற்காக ஒரு போதும் பத்திரிகையிடம் மறுப்புக் கோர முடியாது எனவும் தெரிவித் துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் ஐம்பத்து நான்காவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் அமைந்துள்ள பேரவை செயல கத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் காலை ஒன்பது மணியளவில் நடை பெற்றது. இதன் போது கடந்த மாகாண சபை அமர்வில் வலம்புரி பத்திரிகையில் வெளியாகியிருந்த,
விலகினார் ஆளுநர், நடத்தினார் சுமந்திரன் என்ற தலைப்பு செய்தி உண்மைக்கு புறம்பானது என கூறிய உறுப்பினர் ஆனோல்ட் பத்திரிகையை சபையில் காட்டி மஞ்சள் பத்திரிகை என விமர்சித்திருந்தார்.
ஆனோல்டின் இந்த விமர்சிப்பு சக உறுப்பினர்களினதும், பத்திரிகையாளர்களதும் கடும்,
எதிர்ப்பின் மத்தியில் சபை குறிப்பேட்டில் இருந்து நீக்கப்பட்டது. இந்த விடயத்தினால் கடந்த மாகாண சபையின் அமர்வின் போது, பெரும் குழப்பங்களும் ஏற்பட்டன. இந்த நிலையில் குறித்த பத்திரிகை செய்தி தொடர்பில் மேல திக நடவடிக்கைக்காக சபை நடவடிக்கை குழுவிற்கு பாரப்படுத்தப்பட்டது.
நேற்றைய தினம் மீண்டும் சபையின் அமர்வில் குறித்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சபையின் ஆரம்பத் தில் அவைத்தலைவர் சிவஞா னத்தினால் சபை நடவடிக்கைகள் குழுவுக்கு பாரப்படுத்தபட்ட விடயம் தொடர்பில் கூறப்பட்டு, குறித்த செய்தியில் தரவுத் தவறுகள் காணப் படுவதாகவும்,
ஆளுநர் கூட்டத்தினை விட்டு செல்லவில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த தவறுகள் தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு சபை நட வடிக்கைகள் குழுபரிந்துரை செய்யவில்லை. எனினும் தரவுத்தவறு கள் தொடர்பில் பத்திரிகையின் பிரதம ஆசிரியருக்கு அனுப்பி வைப்பதற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவைத் தலைவர், அதனை பத்திரிகையில் பிரசுரமாக்க கோருவதாகவும் சபையில் தெரிவித்தார்.
எனினும் இதன் போது குறுக் கிட்ட உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், நான் சொன்னதையே பத்திரிகை தலைப்பு செய்தியாக பிரசுரம் செய்திருந்தது. பத்திரிகை தவறு செய்யவில்லை எனவும் அதற்கு மறுப்பு கோருவது என பதனை ஏற்றுக்கொள்ள முடி யாது என ஆவேசமாக கூறினார்.
இதன் போது ஒலிவாங்கியை நிறுத்திய அவைத் தலைவர், விந்தன் மேலும் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் மறுத்தார், இதனால் கோபமடைந்த சிவாஜிலிங்கம் விந்தன் பேசுவதற்கு அனுமதி வழங்குமாறும்,
அவர் பேசுவதனை சபை குறிப்பு ஏட்டில் பதிவு செய்யுமாறும் வலியுறுத்தினார். எனினும் சிவாஜி லிங்கத்தின் கோரிக்கையையும் செவிமடுக்காத அவைத்தலைவர் வலம்புரி பத்திரிகை தொடர்பான விவாதத்தை தானாகவே முடிவுக்கு கொண்டுவந்தார்.