சாதியத்திற்கு புத்துயிர் ஊட்டும் சர்ச்சைக்குரிய நூல் வெளியீட்டிற்கு யாழ்.இந்துக்கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.எனினும் மாற்றிடத்தினில் நூல் வெளியீடு முன்னெடுக்கடுமென அதனை எழுதிய ம.அருளினியன் என்பவர் யாழ்.ஊடக அமையத்தினில் வைத்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்.ஊடக அமையத்தினில் ஊடவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்த அந்நபர் “பெண் போராளி தொடர்பில் நான் எடுத்த பேட்டி தொலைபேசி ஊடாகவே எடுத்தேன். ஆனந்தவிகடன் சொன்னதாலையே அதனை செய்தேன். என்னுடன் கதைத்தவர் போராளியா என்பது கூட எனக்கு தெரியாது. என அவர் தெரிவித்தார். அவர் முன்னாள் போராளியென்பதை உறுதிப்படுத்த கூடவில்லையாவென கேள்வி எழுப்பிய வேளை அதனை ஆனந்தவிகடன் ஆசிரிய பீடம் சரிபார்த்திருக்குமென நம்பியதாகவும் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் பெண் போராளிகள் விபச்சாரம் செய்கிறார்கள் என ஆனந்த விகடனில் ஒரு நேர்காணலை வெளியிட்ட ம். அருளினியன் 5 வருடம் கழித்து தற்போது யாழ் ஊடக மையத்தில் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருந்தார்.
அப்போது இந்த நேர்காணலுக்கு எதிர்ப்பு வந்த போது தம்மிடம் ஆதாரம் இருக்கிறது என்று அறச் சீற்றம் கொண்டு பொங்கிய விகடன் ஏதாவது பதில் வைத்திருக்கிறதா? அல்லது விகடன் தற்போதாவது தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்குமா? என தமிழ் உணர்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே சாதியத்திற்கு புத்துயிர் ஊட்ட வெளியிடப்படும் நூலை நாவலரை விமர்சிக்கும் புத்தகத்தை அவருடைய சிந்தனையின் வழியில் வந்த யாழ். இந்துக் கல்லூரியில் வெளியிடுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று யாழ்ப்பாணத்தின் சனாதனத் தலைவர்கள் இன்று கல்லூரிக்குச்சென்று அதிபரிடம் தெரிவித்துள்ளதாக கருணாகரன் விடயத்தை திரிபுபடுத்த முற்பட்டுள்ளார்.
அத்துடன், இதே ஆட்கள் யாழ்ப்பாணம் கல்வி வலயக் கல்விப் பணிப்பாளரோடும் தொடர்பு கொண்டு இதை வலியுறுத்தியுள்ளனர். அப்படியே வடக்கின் கல்வி அமைச்சையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். விளைவாக புத்தக வெளியீட்டுக்கு மண்படத்தை வழங்க முடியாது என்று தீர்ப்பெழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கருத்துச் சுதந்திரத்தை மறுத்துத் தன்னுடைய வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கடவுளையே எதிர்த்துப்பேசிய தமிழ் விமர்சன மரபு இன்று இப்படிச் சாதாரண கருத்தையே எதிர்கொள்ள முடியாமல் கீழிறங்கியுள்ளது என்பது எவ்வளவு அவமானத்துக்குரியதெனவும் கருணாகரன் சீற்றத்துடன் பொங்கியுள்ளார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனிநபர் ஒருவருடன் தொலைபேசி வழி உரையாடிய போது பயன்படுத்திய வடக்கத்தையான் எனும் சொல் பிரயோகத்திற்கு அவரை குற்றவாளி கூண்டினில் ஏற்றி நியாயம் கேட்டவர் அதே கருணாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comments