மகளீர் கல்லூரி அதிபரை உடனடியாக வீட்டுக்கனுப்பிய சுமந்திரன் (காணொளி)

திடீரென யாழ் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர்
இரவோடு இரவாக நாடுகடத்துவது போன்ற செயல்ப்பாட்டை திருச்சபை ஆயர் திரு தியாகராயா மற்றும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றோர் செய்திருப்பதாக பெற்றோர் மற்றும் பள்ளி மாணவியர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இந்த பாடசாலை இதிபர்மீது ஏற்கனவே இரு பிரிவாக செயற்படும் தென்னிந்திய திருச்சபையின் மீதே மாணவிகள் குற்றம் சாட்டுவதோடு அந்த திருச்சபை ஆயரின் சட்ட ஆலோசகராக செயற்படும் சுமந்திரனே இதன் பின்னணியில் இருப்பதாக தாம் அறிந்துள்ளதாகவும்.

இதனை அவர்கள் செய்வதற்கு 5ஆம் திகதி திறக்க வேண்டிய பாடசாலையினை 8ஆம் திகதிவரை ஒத்திவைத்து அதற்கிடையில் 7ஆம் திகதிக்குள் தற்போதைய அதிபரை பாடசாலையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும். இதில் மதம் சார்ந்த பிரச்சனை இருப்பதால் தாமும் மதம் சார்ந்து சிந்திப்பதாகவும் அதற்காக அங்கஜன் ராமநாதனிடம் உதவி பெறப்போவதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தில் அதிகூடிய செல்வாக்கை அல்லது முறை தவறிய அதிகாரத்தை M.A சுமந்திரன் அவர்கள் பயன்படுத்தியுள்ளதாக மாணவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தின் போதும் பதாதைகளிலும் குறிப்பிட்டிருந்தனர் .

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila