தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டபோது கொழும்பு குழம்பாதது ஏன்?


தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் எழுச்சிப்  பேரணி நடத்தியதால்தான் இலங்கை அரசு தீர் வைத் தரவில்லை என்று நம் அரசியல் தலைமையில் இருக்கக் கூடிய சிலர் கருத்துத் தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை. 

அந்தளவுக்கு எங்களிடையே அற்பத்தனமான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 
எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவில் வெற்றி அளித்துள்ளது. 

எம் வர்த்தகப் பெருமக்கள் ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து தங்கள் வர்த்தக நிலையங்களை, சந்தைகளை பூட்டி பேரணிக்கு ஆதரவு கொடுத்தமை மகத்தான சாதனை எனலாம். 

ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக  ஒற்றுமைப்பட்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியமை, எல்லாவற்றையும் நாங்களே தீர்மானிப்பவர்கள் என்று நினைத்தவர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.  

அதற்காக தொடர்ந்து தவறான-பிழையான-நியாயத்திற்கு முரணான கருத்துக்களை வெளியிடுவது அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.  

தவிர, எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி. வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆற்றிய உரை கண்டு சிங்களத் தலைவர்கள் சிலர் நீதிக்கு முரணான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இத்தகைய கருத்துக்கள் பேரினவாத சிந்தனையும் மனித வதையில் திருப்தியும் அடைகின்ற மிலேச்சத்தனமானவர்களின் கருத்து என்பது தான் உண்மை. 

எழுக தமிழ்பேரணியின் இறுதியில் வடக்கு மாகாண முதலமைச்சர்ஆற்றிய உரையை சரியாக கிரகித்திருந்தால், அந்த உரையானது மிகப்பெறும தியானது என்பதை சிங்கள மக்கள் உணர்ந்திருப்பர்.

எமதருமை சிங்கள சகோதர சகோதரிகளே! இந்தப்பேரணி உங்களுக்கு எதிரானது அல்ல.  இஃது தமிழ் மக்கள் தங்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற பேரணி. இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவிரும்புகின்றனர் என்று கூறுவதில் கொழும்பு  கொந்தளிக்குமாக இருந்தால், தமிழ் மக்களை  என்று அடிமையாக வைத்திருக்கவே கொழும்பு நினைக்கிறது என்று கூறுவதில் என்ன தவறு?

வடக்கின் முதல்வர் மிகப் பெளயமாக ஆற்றிய உரையில், கொழும்பு குற்றம் கூறுமாயின் சிங்கள அரசியல்வாதிகள் கோபம் கொள்வார்களாயின் தமிழ்த் தலைவர்கள் எப்படிப் பேச வேண்டும் என்று கொழும்பு நினைக்கிறது என்பதுதான் இப்போது எழுகின்ற கேள்வி.

வன்னிப்பெரும் நிலப்பரப்பில் தமிழினத்தை கொன்றொழித்து வெறியாட்டம் ஆடிய பின்னரும் தமிழ் மக்கள் எதுவும் கதைக்கக் கூடாது, அரசின் காலில் வீழ்ந்து மண்டியிட வேண்டும் என்று நினைப்பது எத்துணை மடமைத்தனம். இந்தச் சிந்தனை இருக்குமாயின் தமிழ் மக்களுக்கான தீர்வை இந்த ஆட்சியாளர்கள் தருவார்களா என்ன? 

தமிழ் மக்கள் நடத்திய பேரணி அகிம்சை வழியானது; ஜனநாயக ரீதியானது. இந்தப் பேரணி மதிக்கப்படவேண்டும். அதுவே நல்லாட்சிக்கு அழகு. இதைவிடுத்து பேரணிக்கு எதிராக யார் கருத்துரைத்தாலும் அது இனவாதத்தைத் தூண்டும் செயலேயன்றி வேறில்லை.  

ஆக, தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேரணி யில் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதே இந்த நாட்டின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் உதவும். இதைவிடுத்து வித ண்டாவாதக் கருத்துக்களை யார் முன்வைத்தாலும் அவர்கள் தமிழ் மக்களிடம் இருந்து அந் நியப்படுத்தப்படுவர் என்பது சர்வ நிச்சயம். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila