வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுக தமிழ் மக்கள் பேரணியில் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றில் நேற்று ஆளும் கட்சியினருக்கும் மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றம் நேற்று சபா நாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை முன்னிலைப்படுத்திய கூட்டு எதிர்க் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, வட மாகாண முதலமைச்சரின் உரை நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது எழுந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இந்த விவகாரம் தொடர்பில் விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிப்பார் என்று தெரிவித்ததுடன், வட மாகாண முதலமைச்சர்தான் அப்படிக் கூறவில்லை என்று கூறியதையும் சுட் டிக்காட்டினார்.
இந்தக் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் உறுதிப்படுத்தினார். எனி னும் இதனை ஏற்க மறுத்து குறுக்கிட்ட கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச, சிறுபிள்ளைத்தனமாக பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்த் தேசியக் கூட் டமைப்பினரின் முக்கியஸ்தரான வடமாகாண முதலமைச்சரின் உரை தொடர்பில் எடுக்கப் போகும் நடவடிக்கையை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதில ளி த்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சி எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்று குறி ப்பிட்டதுடன், அதனால் அங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு தமிழரசுக் கட்சி பொறுப்புக் கூறாது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வட மாகாண முதலமைச்சர் கட்சிசார்பி ன்றி தனிப்பட்ட முறையிலேயே எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றியிருப்பதாகவும் தெரிவித்த சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் வட மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்பதை மறந்து விடலாகாது என் றும் கூறியுள்ளார்.
அத்துடன் வட மாகாண முதலமைச்சர் தான் இனவாதத்தை தூண்டும் வகையில் உரையாற்றவில்லை என் பதை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளதையும் சம்பந்தன் சுட் டிக் காட்டினார்.
இதன்போது மீண்டும் எழுந்து கருத்துத் தெரிவிக்க கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்பட்ட போது தலையிட்ட சபாநாயகர் கரு ஜய சூரிய, இது குறித்து தொடர்ந்தும் விவாதம் நடத் திக்கொண்டிருக்க அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டு வழமையான நடவடிக்கைகளுக்கு செல்லுமாறு பணித்தார்.
இதற்கமைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வற் வரி திருத்தச் சட்ட த்தை அவையில் சமர்ப்பித்து உரையாற்றிய போது மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கூச்சல் எழுப்பிய வண்ணம் தமது எதிர்ப்பை வெளியிட்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.