”எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்கள் உட்பட உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். போரிலே உயிரிழந்த மாவீரர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் நாளை மறுதினம் முதல் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்த வகையில், இறுதி நாளான 27 ஆம் திகதி நல்லூர் ஆலய முன்றலில் அனுஷ்டிக்கப்படும். மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் பொது மக்கள் அன்றையதினம் மாவீரர்களுக்கான வீரவணக்கத்தினை செலுத்த முடியும். ஒன்று கூட முடியாதவர்கள், வடகிழக்கு தமிழ் தாயகத்தில் தாம் விரும்பும் பொது இடத்தில் மற்றும் வீடுகளில் வீரவணக்கத்தினைச் செலுத்த முடியும். வீரவணக்கத்தினைச் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். உலகில் வாழும் ஈழத்தமிழர்கள் மாத்திரமன்றி தமிழர்களும், மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறந்த ஒருவரை நினைவுகூருவது எமது உரிமை. உயிரிழந்தவர்களை நினைவுகூருவுதற்கு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தினை மேற்கொண்ட ஜே.வி.பி கிளர்ச்சியாளர்கள் தற்போது அந்த நினைவு தினங்களை அனுஷ்டித்து வருகின்றார்கள். அதேபோன்றே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மே 17 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்படுகின்றதென, ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது, ஆயுதப் போராட்டக்காரர்களை நினைவுகூருகின்றோம் என்ற அர்த்தமும், விசமத்தனமானது. வேண்டுமென்றே எமது மக்களை பயபீதியில் வைத்திருக்க முயற்சிக்கின்றார்கள் என்றே பார்க்கத் தோன்றுகின்றது. எனவே, மாவீரர் தினம் அனுஷ்டிப்பதென்பது எமது உரிமை. இந்த உரிமையை யாராலும் தடுக்க முடியாது” என அவர் குறிப்பிட்டிருந்தார். |
நல்லூர் முன்றலில் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்! - சிவாஜிலிங்கம் அழைப்பு
Related Post:
Add Comments