நியூஸிலாந்து தென் கிழக்கு பகுதியில் இரண்டு மணிக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சில பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த பகுதியில் இருந்து 3 தொடர்க்கம் 5 கிலோ மீற்றர் வரையான பகுதியில் உள்ளவர்களை அவதானமாக இருக்கும் படி அந்த நாட்டின் சிவில் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நியூஸிலாந்தில் சுனாமி தாக்கியுள்ளது: வெளியானது விபரம் (முதலாம் இணைப்பு)
நியூஸிலாந்தின் தீவு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நிலநடுக்கம் கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கிலோ மீற்றர் தூரத்தில் 7.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நில அதிர்வை அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் வடகிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியுள்ளதாக அமெரிக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் போது ஏற்பட்ட சுனாமி அலையின் முதலாவது அலையால் பெரிதாக தாக்கம் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அடுத்த அலையின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புக்கள் இருப்பாதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த சுனாமி அனர்த்த நிலை தோன்றியுள்ளதாக அந்த பகுதியில் இருக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும் படியும் உயரமான பாதுகாப்பு இடங்களுக்கு செல்லும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.