அதேயிடத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே குறித்த தங்கவேலாயுதம் - கமலாதேவி அல்லது பரமேஸ்வரி (62) என்ற பெண்ணைக் கொலை செய்தவராவார்.
இவர் பெண் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே பெண்ணைக் கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று மோப்ப நாய் சகிதம் விசாரணையில் ஈடுபட்ட பருத்தித்துறை பொலிஸார் பொதுமகன் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து மோப்பநாயின் உதவியுடன் கொலையாளியின் வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அங்கு சந்தேகநபரினால் தென்னைமரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொலை செய்த நேரத்தில் அணிந்திருந்த இரத்தக்கறையுடனான சேட் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து கொலையாளி யார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து சந்தேக நபர் உடனடியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் மலையகப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பல வருடங்களுக்கு முன் பொற்பதிக் கிராமத்திற்கு தொழில் நிமித்தம் வந்து அங்கு திருமணமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.