வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காணி, பொலிஸ் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மாகாண சபையின் அமர்வில் முதலமைச்சர் அமைச்சு மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வீதிகள் குப்பை நிறைந்தவையாக இருக்கின்றது. உள்@ராட்சி மன்றங்கள் இவை தொடர்பில் அக்கறை எடுப்பதில்லை. சட்டம் ஒழுங்கு முதலமைச்சருக்கு உரியது. பொலிஸாருக்கு கட்டளை வழங்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு. அதனை அவர்கள் ஏற்கின் றார்களா? இல்லையா? என்பதைப் பின்னர் பார்ப்போம். பல விடயங்களில் பொலிஸாரை நெறிப்படுத்த வேண்டியுள்ளது. காணி அதி காரம் எங்களுக்கு இல்லைத்தான்.
ஆனால் மேல் மாகாண சபை காணி நியதிச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அவர்கள் அதனை நடைமுறைப்படுத்த மகிந்த அரசு அனுமதிக்கவில்லை இருப்பினும் அவர்கள் செய்தது போன்று நாங்களும் செய் யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.