யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்.வணிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
யாழில் வீதிகளில் பயணம் செய்யும் அப்பாவி மக்களே போக்குவரத்து பொலிஸாரினால் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்படுகின்றது.
பாராளுமன்றஉறுப்பினர்கள்,அமைச்சர்கள்,இராணுவத்தினர்,பொலிஸ்அதிகாரிகளின்உறவினர்கள்,சமுதாயத்தில்மேல்மட்டத்தி லுள்ளவர்களின் வாகனங்கள் பொலிஸாரால் மறிக்கப்படுவதில்லை அவர்களின் வாகனங்களின் வேகக்கட்டுப்பாடுகள் பொலிஸா ரின் மீற்றரில் பதிவாகுவதில்லை சட்டத்தால் அப்பாவிகளே தண்டிக்கப்படுகின்றனர்.
எனவே வீதிகளில் கமரா பொருத்துவதன் மூலம் சட்டத்தின் முன் எல்லோரையும் நிறுத்தமுடியும். இதேவேளை வீதிகளால் நாங்கள் பயணிக்கும் போது பொலிஸார் வீதிகளின் ஒதுக்குப்புறமாக நின்று விட்டு திடீரென பாய்ந்து மறிக்கின்றனர். இதனால் விபத்து க்கள் ஏற்படுகின்றன.
மேலும் இரவுவேளைகளில் டோச் லைற் மூலம் வாகனங்களில் பயணிப்போரின் முகத்தில் ஒளியை பாய்ச்சுகின்றர்.இவ்வாறான நடவடிக்கை மக்களுக்கு எரிச்சலூட்டும் செயற்பாடுகள் ஆகும். இவைகளை பொலிஸார் உடன் நிறுத்தவேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.
இதற்கு பதிலளித்த யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வணிகர் சங்கத்தலைவரின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதுடன் பிரதான வீதிகளில் கமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், அதேவேளை பொலிஸார் சடுதியாக வீதிகளில் நின்று கொண்டு வழிமறிப்பது குறித்து பொலிஸாரிற்கு ஆலோசனை வழங்கப்படும், மேலும் பொலிஸார் டோச் லைட் வைத்து வாகனங்களை மறிப்பதுவும் முகத்தில் ஒளி பாய்ச்சும் செயற்பாடுகளும் இனிவரும் காலங்களில் தடுக்கப்படும் அதற்கு பதிலாக சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட பாற் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.