தீ வைக்கப்பட்ட கடையில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டீ.வி வீடியோவிற்கமைய விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தீ வைக்கும் சம்பவத்தினால் இந்த நபரின் காலில் தீ காயம் ஒன்றும் காணப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த நபர் மஹரகம பாடசாலை மாவத்தையை சேர்ந்தவர் எனவும் அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் இரவு நேரங்களில் சைக்கிளில் வருகைத்தந்து மூடியிருக்கும் கடைக்கு செல்லும் காட்சியும், கடைக்கு தீ வைக்கும் காட்சியும் சீ.சீ.டீ.வி காணொளியில் பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்டதன் பின்னர் நீண்ட வாக்குமூலம் வழங்கிய நபர் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளார்.
கடந்த மே மாதம் 22ஆம் திகதி மஹரகம ஹைலெவல் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கும், மே மாதம் 24ஆம் திகதி விஜேராமவில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கும், ஜுன் 6ஆம் திகதி விஜேராமவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மற்றும் நேற்று முன் தினம் மஹரகமையில் அமைந்துள்ள மற்றும் ஒரு வர்த்த நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களினால் அந்த வர்த்தக நிலையங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த வர்த்தக நிலையங்களுக்கு யாரின் அவசியத்திற்காக தீ வைக்கப்பட்டதென்பதனை ஆராய்வதற்காக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.