அண்மையில் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும்போது எனக்கு முதுகெலும்பு உள்ளது. படையினரை விசாரிக்க இடமளிக்க மாட்டேன் என கூறியிருந்தார். ஜனாதிபதியின் கருத்துத் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருந்தால் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் கூறியிருந்தார். சுமந்திரனின் அந்த கருத்தை காண்பித்து மாகாணசபை சிங்கள உறுப்பினர் ஜெயத்திலக்க இன்றைய தினம் உரையாற்றினார். அதற்குப் பதிலளித்துப் பேசிய சிவாஜிலிங்கம், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் முதுகை தடவி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.பி.நாகநாதன் உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா? என கேட்டதை போல் ஜனாதிபதியின் முதுகை தடவி எங்களுடைய தமிழ் தலைவர்கள் கேட்கும் நிலை வரும் எனக் கூறினார். இதேபோல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் பேசும் போது, எனக்கு முதுகெலும்பு உள்ளது. படையினரை விசாரிக்க விடமாட்டேன் என கூறும் ஜனாதிபதி துணிவிருந்தால் அதே கருத்தை ஜெனிவாவில் சொல்லட்டும் பார்க்கலாம் என கூறினார். |
ஜனாதிபதிக்கு முதுகெலும்பு இருக்கிறதா? - வடக்கு மாகாணசபையில் சூடான விவாதம்
Related Post:
Add Comments