இரு இளைஞர்களை கொலை செய்த வழக்கில் இருந்து 9 இராணுவத்தினர் விடுவிப்பு!


யாழ்ப்பாணம்- சிறுப்பிட்டியில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 இராணுவத்தினரில் 10 பேரை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாண நீதிவான் மன்றிற்கு அறி­வு­றுத்­தல் வழங்­கி­யது. அவர்­க­ளில் ஒரு­வர் உயி­ரி­ழந்­து­விட்­டார். அத­னால் 9 இரா­ணு­வத்­தி­னர் நேற்று விடு­விக்­கப்­பட்­ட­னர்.
யாழ்ப்பாணம்- சிறுப்பிட்டியில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 இராணுவத்தினரில் 10 பேரை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாண நீதிவான் மன்றிற்கு அறி­வு­றுத்­தல் வழங்­கி­யது. அவர்­க­ளில் ஒரு­வர் உயி­ரி­ழந்­து­விட்­டார். அத­னால் 9 இரா­ணு­வத்­தி­னர் நேற்று விடு­விக்­கப்­பட்­ட­னர்.
           
1997ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் புத்­தூர் பகு­தி­யில் 2 இளை­ஞர்­கள் கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­ட­னர். இந்­தக் கொலைக் குற்­றச்­சாட்­டில் அந்­தக் காலப்­ப­கு­தி­யில் சிறுப்­பிட்டி இரா­ணுவ முகா­மில் கட­மை­யாற்­றிய லெப்­ரி­னன்ட் தரத்தை சேர்ந்த ஒரு அதி­காரி உட்­பட 16 இரா­ணு­வத்­தி­னர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் அச்­சு­வே­லிப் பொலி­ஸா­ரால் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­கள் அந்­தக் காலப் பகு­தி­யில் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­த­ னர். அத்­து­டன் அந்த வழக்கு கிடப்­பில் போடப்­பட்­டது.
இந்த நிலை­யில் 2016ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 16 பேருக்­கும் எதி­ரா­கக் கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு சட்­டமா அதி­ப­ரின் ஆலோ ச­னை­கள் யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றுக்கு வழங்­கப்­பட்­டது. 16 இரா­ணு­வத்­தி­ன­ருக்­கும் அழைப்­புக் கட்­டளை அனுப்­பப்­பட்­டது. அவர்­க­ளில் இரண்டு இரா­ணு­வத்­தி­னர் சாவ­டைந்­து­விட்­ட­னர் என்று மன்­றுக்கு அறி­விக்­கப்­பட் டது.
மிகுதி 14 இரா­ணு­வத்­தி­ன­ரும் நீதி­மன்­றில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர். பின்­னர் அவர்­கள் யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றி­னால் கொலைக் குற்­றச்­சாட்­டின் அடிப்­ப­டை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர். எனி­னும் 2016ஆம் ஆண்டு நவம்­பர் மாத காலப்­ப­கு­தி­யில் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி ­லி­ருந்து இந்த இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக எது­வித நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுக்க வேண்­டாம் என்று குறிப்­பிட்டு இன்னொரு அறி­வு­றுத்­தல் யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.
இத­னைக் கார­ணம் காட்டி இரா­ணு­வத்­தி­னர் சார்­பில் கோரப்­பட்ட பிணை மனு­வும் யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றம் நிரா­க­ரித்து அவர்­க­ளின் விளக்­க­ம­றி­யலை நீடித்­தது. பின்­னர் 14 இரா­ணு­வத்­தி­ன­ரின் சார்­பில் அவர் க­ளது உற­வி­னர்­க­ளால் யாழ்ப்­பாண மேல் நீதி­ மன்­றில் பிணை விண்­ணப்­பம் செய்­யப்­பட்­டது. 14 இரா­ணு­வத்­தி­ன­ரில் 5 பேருக்கு பிணை வழங்­கப்­பட்­டது.
ஏனை­யோர் தொடர்ந்­தும் விள க்­க­ம­றி­யல் வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.இந்த வழக்கு யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றில் நேற்று அழைக்­கப்­பட்­டது. இரா­ணு­வத்­தி­னர் பொலி­ஸா­ரின் பாது­காப்­பு­டன் அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அச்­சு­வேலி பொலி­ஸார் இந்த வழக்­குத் தொடர்­பான மேல­திக அறிக்­கையை மன்­றில் முன்­வைத்­த­னர்.
“வழக்­குத் தொடர்­பாக சட்­டமா அதி­ப­ரின் ஆலோ சனை கிடைத்­துள்­ளது. அதில் 10 இரா­ணு­வத்­தி­னரை வழக்கு நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து விடு­விக்­கு­மாறு அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய ஆறு இரா­ணு­வத்­தி­னர் தொடர்­பாக ஆலோ­சனை கிடைக்­கப்­பெ­ற­ வில்லை. அவர்­கள் தொடர்­பாக சட்ட மா அதி­ப­ரின் ஆலோ­ச­னையை பெற நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது” என்று அச்­சு­வே­லிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இந்த வழக்­கில் விடு­விக்­கு­மாறு கூறப்­பட்ட 10 இரா­ணு­வத்­தி­ன­ரில் ஒரு­வ­ரும் ஏனைய 6 இரா­ணு­வத்­தி­ன­ரில் ஒரு­வ­ரும் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­து­ விட்­ட­னர். அத­னால் 9 பேர் நேற்று வழக்­கி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்­ட­னர். ஏனை­ய­வர்­க­ளான 4 இரா­ணு­வத்­தி­ன­ரின் விளக்­க­ம­றி­யலை எதிர்­வ­ரும் 27ஆம் திகதி வரை நீடிக்­கு­மாறு நீதி­வான் சி.சதீஸ்­த­ரன் கட்­ட­ளை­யிட்­டார்.
இதே­வேளை, தற்­போது விளக்­க­ம­றி­யல் வைப்­ப­தற்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்ள அறு­வ­ரில் ஒரு­வர் லெப்­ரி­னன்ட் கேணல் தரத்தை சேர்ந்த இரா­ணுவ அதி­காரி. இன்­னொ­ரு­வர் ஏற்­க­னவே சாவ­டைந்­துள்­ளார். இந்த வழக்கு தொடர்­பான வழக்­கே­டும் ஏனைய ஆவ­ணங்­க­ளும் அச்­சு­வேலி பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து கடந்த சில வரு­டங்­க­ளுக்கு முன்­னரே காணா­மல் போயுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. இத­னால் வழக்­குத் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன் னெ­டுப்­ப­தில் அச்­சு­வேலி பொலி­ஸார் சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­தில் தங்­கி­யி­ருக்க வேண்­டி ­யுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila