ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற தடை! பிரபுக்கள் அவை அதிரடி

பிரபுக்கள் அவையில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பிரித்தானியாவின் மசோதா முடங்கியது.
மசோதாவில் திருத்தம் வேண்டும் என வாக்களித்த பிரபுக்கள் அவை, பிரித்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்தியுள்ளது.
பிரபுக்கள் அவையில் நடந்த விவாதத்தின் போது, பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தொழிற்கட்சி தலைமையில் முறையிடப்பட்டது.
இதன் மீது நடந்த வாக்கெடுப்பில் மசோதாவில் திருத்தம் வேண்டும் என்பதற்கு ஆதரவாக 358 பேர் வாக்களித்தனர், எதிராக 256 பேர் வாக்களித்தனர்.
102 வாக்குகள் பெருன்பான்னையுடன் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரபுக்கள் அவை உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் மசோதா மீண்டும் கீழவையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிரபுக்கள் அவையின் அதிரடி முடிவால் பிரதமர் தெரசா மேவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரபுக்கள் அவையில் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள அரசு, இதை இரத்து செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila