பௌத்த விஹாரைகளுக்கு காணி உறுதிகளை வழங்கி வைத்தார் ஜனாதிபதி!

Maithr's Speech on 14

எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின வைபவத்தை முன்னிட்டு பௌத்த விஹாரைகளின் புனித காணிகளுக்கான உரித்துரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 60 விஹாரைகளுக்கான உறுதிகளை வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அரச காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விஹாரைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அந்த விஹாரைகளின் தலைமை தேரர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு விஹாரைகளின் உரிமையை வழங்கும் வகையில் அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உறுதிகள் இதன்போது கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கமைய புத்தசாசன அமைச்சர், பௌத்த அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் காணி அமைச்சினதும், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தினதும் வழிகாட்டலில் இந்த செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila