ஆளும்கட்சி 30 உறுப்பினர்களில் 15பேர் முதலமைச்சர் பக்கம்(விபரம்)


வட மாகாண சபையின் ஆளும் தரப்பினை சேர்ந்த தமிழரசு கட்சியின் 13 உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளை சேர்ந்த 7 பேரும் மேற்படி முதலமைச்சருக்கு எதிரான கடிதத்தில் கையொப்பம் இட்டிருந்தனர்.

தமிழரசு கட்சியின் சுகிர்தன், சிவயோகன், தர்மலிங்கம் சயந்தன், ஆர்னல்ட், பரஞ்சோதி, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அரியரத்தினம், பசுபதிபிள்ளை, கல்வியமைச்சர் குருகுலராசா, சிறாய்வா, சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், கமலேஸ்வரன் ஆகியோரும்

ஈ.பி.டி.பி.யினை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் தவராசா, ரெலோ கட்சியை சேர்ந்த மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த றிஃப்கான், ஜவாகிர், ஜயதிலக ஆகியோரும், சுதந்திர கட்சியிலிருந்து அகிலதாஸ் மற்றும் போனஸ் ஆசனம் மூலம் தெரிவான அஸ்வின் ஆகியோரும் முதல்வருக்கு எதிரான தீர்மானத்தில் கையொப்பம் இட்டிருந்தனர்.

இதேவேளை முதல்வருக்கு ஆதரவாக முதல்வர் உள்ளடங்கலாக 15 பேர் தமது ஆதரவை இதுவரை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

எம்.கே.சிவாஜிலிங்கம், எம்.தியாகராஜா, ஜீ.குணசீலன், ஆர்.இந்திரராஜா, து.ரவிகரன், கே.சிவநேசன், திருமதி அனந்தி சசிதரன், க.சர்வேஸ்வரன், பொ.ஐங்கரநேசன், விந்தன் கனகரட்ணம், ஏ.புவனேஸ்வரன், செ.மயூரன், ஜீ.ரி.லிங்கநாதன், ப.கஜதீவன் ஆகியோரே முதல்வருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இவர்களில் 2 பேர் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் என்பதுடன் மற்றயவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை தமிழரசுக்கட்சியோடு இணைந்துவிட்ட தமது உறுப்பினர் டெனிஸ்வரனை கண்டிப்பதாக ரெலோ அறிவித்துள்ளதுடன் முதல்வர் விக்கினேஸ்வரனின் முடிவை தாம் ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila