படையினரை பயன்படுத்தும் அளவுக்கு நாட்டில் பிரச்சினைகள் எதுவும் இல்லை. நாட்டின் சில பகுதிகளில் சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். முஸ்லிம் கடையொன்றுக்கு தீ வைத்துள்ளதாக கூறியோ அல்லது விகாரையின் பிக்கு மீது தாக்குதல் என்று கூறியோ பெரிய செய்தியாக ஒன்று உருவாக்கப்படுகின்ற போதிலும் அவை அந்தளவு பயங்கரமான விடயமல்ல. இவை தலைப்புச் செய்திகளுக்கு சிறந்ததாக இருப்பினும் ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வௌியிடாதிருப்பதே நல்லது என்று அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் நாட்டில் பெரும்பாலானோரிடம் நல்லிணக்கம் காணப்படுவதாகவும் சிறிய அடிப்படைவாதிகள் குழுவே முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். |
படையினரைப் பயன்படுத்தும் அளவுக்கு பிரச்சினை இல்லை! - கருணாசேன ஹெட்டியாராச்சி
Related Post:
Add Comments