இந்தியா சார்ந்த புவிசார் அரசியற் பிரச்சனையின் வெளிப்பாடாகவே இலங்கையின் இனப்பிரச்சனை உருவானதென்பதால் புவிசார் அரசியற் பிரச்சனைக்கான தீர்வில் இருந்தே இனப்பிரச்சனைக்கான தீர்வு உருவாக்கப்பட வேண்டும்.
அத்தியாயம் 1
புவிசார் அரசியல், வெளிநாடுகளின் நலன், சிங்களத் தலைமைத்துவம் ஆகிய மூன்று தரப்புக்களினது நலன் சார்ந்த சேர்க்கையால் உருப்பெற்று வளர்ந்து செல்வதே இலங்கையின் இனப்பிரச்சனையாகும். இறுதி அர்த்தத்தில் இதற்கு முற்றிலும் பலியாகுவது ஈழத்தமிழராவர்.
இலங்கைத் தீவானது இருவகைப் பரிமாணங்களுடன் கூடிய கேந்திர முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. முதலாவதாக அது வளம் பொருந்திய இந்திய உபகண்டத்தின் தென்முனையில் அதுவும் இந்தியாவிற்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது. அடுத்து இரண்டாவதாக அது பரந்த இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையத்தில் அமைந்துள்ளது. இந்த இரு கேந்திர நலன்களுக்காகவும் அல்லது இரண்டில் ஒன்றுக்காக பிராந்திய மற்றும் உலகப் பேரரசுகள் இலங்கை அரசின் நட்புறவைப் பெறுவதற்காக ஈழத்தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றன.
இனப்பிரச்சனையைத் தீர்க்கவல்ல நம்பகரமான தலைவர் என்று ஒருவரையாவது சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வரலாறு இதுவரை அடையாளம் காட்டவில்லை. அதற்கான அரசியல் திடசித்தமுள்ள (Political will) ஒரு தேசியத் தலைவர்தானும் சிங்கள மக்கள் மத்தியிற் தோன்றவில்லை.
இலங்கையின் வரலாற்றுப் போக்கை உன்னதமான புதிய பாதையில் வடிவமைத்திருக்க வேண்டிய சிங்களத் தலைவர்கள் அதற்குப் பதிலாக ஏற்கனவே வக்கிரமடைந்திருந்த பழைய இனவாத வரலாற்று கடைசல் பட்டறையில் கடைந்து எடுக்கப்படும் சிங்கள பேரினவாதத் தலைவர்களாகவே வடிவம் பெற்றனர்.
இலங்கையின் இனப்பிரச்சனை என்பது அடிப்படையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையேயான ஒரு பிரச்சனை அல்ல. இந்தியாவிற்கு அருகாமையிலுள்ள இலங்கைத் தீவின் அமைவிடம் சார்ந்த புவிசார் அரசியலின் அடிப்படையில், இந்தியாவின் மீது சிங்கள மக்களுக்கு இருக்கும் நீண்ட வரலாற்று ரீதியான அச்சத்தின் காரணமாக எழுந்த இந்திய எதிர்ப்புவாதத்தின் வெளிப்பாடாகும். இவ்வெளிப்பாடானது தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள மக்களின் இன அழிப்பு அரசியலாய் வடிவம் பெற்றது.

இவ்வாறு வரலாற்று ரீதியாக இந்தியா மீது சிங்கள-பௌத்தர்களுக்கு இருக்கும் அச்சமும் அதன் அடிப்படையிலான இந்திய எதிர்ப்புவாதமும், தமிழருக்கு எதிரான இன அழிப்பு அரசியலாய் வடிவம் பெற்ற நிலையில் ஈழத் தமிழ் மக்கள் புவிசார் அரசியலின் கைதிகளாய் அதற்குள் சிக்குண்டு அல்லற்படுகின்றனர்.
இதன்படி இந்திய எதிர்ப்புவாதத்தையும், தமிழின எதிர்ப்புவாதத்தையும் அவற்றிற்கு பொருத்தமான தலைவர்களையும் உற்பத்தி செய்யவல்ல ஓர் இரும்பு பட்டறையாக இலங்கையின் வரலாற்றுப் போக்கு அமையலாயிற்று. இதன் மூலம் நவீன பல்லினச் சமூகத்தன்மை, இனஐக்கியம் என்பனவற்றிற்கு எதிர்மாறான ஒரு சமூக அரசியல் வரலாற்றுக் கட்டமைப்பைக் கொண்ட அரசாக இலங்கை வடிவம் பெற்றது.
சிங்கள-பௌத்தர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள வரலாற்றுப் பகைமையை முதலீடாக்கி அதன் மூலம் இலங்கையின் நவீன வரலாற்றில் சிங்கள-பௌத்தர்களுக்கும், இந்தியாவிற்கும் இடையான பகைமையைத் தூண்டி வளர்த்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் இந்தியாவிற்கு எதிரான தமது கேந்திர நலன்களை அடைவதில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர். இந்த அரசியற் சதியில் சிங்களவரை தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர். பிரித்தானியர் சட்டபூர்வமாகத் தோற்றுவித்த அந்த அழிவுப் பாதையின் தொடர் வளர்ச்சியே இற்றை வரையான அரசியல் யாப்புக்களாகும்.
ஈழத் தமிழர்கள் எப்போதும் மேற்படி புவிசார் அரசியலின் கைதிகளாகவே உள்ளனர் என்ற எளிய பேருண்மையை ஆரம்ப காலத்தில் தமிழ்த் தரப்பு சரிவர புரிந்து கொள்ளத் தவறியது. இப்போது அந்தப் பின்னணியில் வைத்து டொனமூர் யாப்பு முதல் பிற்காலத்தில் எழுந்த அனைத்து யாப்புக்களும் எப்படி வடிவம் பெற்றன என்பதை புரிந்து கொள்வதன் மூலம், வரப்போகும் புதிய யாப்புக்கும் தமிழரின் எதிர்கால அரசியலுக்குமான அடிப்படை அம்சங்களை நாம் சரிவரப் புரிந்து செயலாற்ற முடியும்.
இலங்கையில் தமிழரை அழித்துவிட்டால் இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் படர ஏதுக்கள் இருக்காது என்ற நீண்டகால கண்ணோட்டத்தின் அடிப்படையில், தமிழின அழிப்பு கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பிரித்தானிய ஆட்சியின் துணையுடனேயே அரங்கேறத் தொடங்கியது.
இவ்வாறு ஏற்கனவே காணப்பட்ட பண்டைய வக்கிரமடைந்த வரலாற்று இரும்புப் பட்டறையைப் பற்றியும், அது மாற்றப்படாது மேலும் உறுதிப்படுத்தப்படும் வகையில் வழிநடத்தப்படுகின்றமை பற்றியும் நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் இலங்கைத் தீவின் வரலாற்றைப் பற்றியோ, இனப்பிரச்சனைக்கான தீர்வைப் பற்றியோ, அதற்கான அரசியல் யாப்பு திருத்தங்களைப் பற்றியோ சிந்திக்க முடியாது.

சுதந்திரத்தின் முன்பின்னான காலகட்டத்தில் ஸ்தாபிதம் அடையத் தொடங்கிய பௌத்த-சிங்களமய நிறுவன கட்டமைப்புக்களும், அரசியற் செயற்பாடுகளும், கடந்த முக்கால் நூற்றாண்டுகால அரசியற் போக்குக்கு ஊடாக தமிழின எதிர்ப்பைக் கொண்ட சிங்கள பௌத்த இனவாதப் பாதையில் தங்கு தடையின்றி நேர்கணியமாக பயணித்துச் செல்கின்றன. இலங்கையின் அரசியற் போக்கானது இனி எந்தொரு நல்மனங் கொண்ட தலைவனதோ அல்லது அத்தகைய எந்தொரு மனிதனது விருப்பிலோ தங்கியிருக்காது முற்றிலும் இனவாதப் பாதையில் பயணிப்பதற்கேற்ற அடிக்கட்டுமானத்தையே கொண்டுள்ளது.
நடைமுறை அரசியலுக்கு ஊடாக மேலும் மேலும் சிக்கலாக்கப்பட்டுவிட்ட இத்தகைய யார்த்தத்தை முதலில் நுணுக்கமாக தரம்பிரித்து ஆராய வேண்டும்.
புவிசார் அரசியல் கட்டமைப்பு (Geopolitical Structure) நிரந்தரமானது. நிறுவன கட்டமைப்பு (Institutional Structure) மனிதனால் வடிவமைக்கப்படுவது. வரலாற்றுப் பின்னணி (Historical Background) என்பது ஏற்கனவே வடிவம் பெற்றிருப்பது. ஆனால் அதன் போக்கு மாற்றியமைக்கப்படக்கூடியது. பொருளாதார கட்டமைப்பு (Economic Structure) என்பது வரலாற்றுபூர்வமாக எழுவதும் மனிதனால் கட்டமைக்கப்படக்கூடியதுமாகும். தலைமைத்துவம் (Leadership) என்பது மேற்படி அம்சங்களுக்கிடையே நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ வேதியற் கலப்பைச் செய்யவல்லது.
இங்கு பிரச்சனை என்னவெனில் சிங்களத் தலைமைத்துவமானது தமது நலன் சார்ந்த மலினப்பட்ட, வக்கிரமடைந்த பாதையில் மேற்படி அம்சங்களுக்கிடையே வேதியற் கலப்புக்களை மேற்கொண்டு இலங்கைத் தீவின் வரலாற்றை ஓர் எரிமலையாக மாற்றிவிட்டன. அந்த எரிமலையில் எரிந்து பொசுங்குபவர்களாக ஈழத் தமிழர்கள் உள்ளனர். இத்தகைய வரலாற்று வேதியல் கலப்பைக் கொண்ட இலங்கை அரசியலை விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் மிக நுணுக்கமாகவும் பிழையின்றி விஞ்ஞானபூர்வமாகவும் ஆராய வேண்டியது அவசியம்.
இதனை வரலாற்று படிமுறை (Sequence) கொண்டு தெளிவுற நோக்குவோம்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் 1943ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க சபையில் முன்மொழியப்பட்டிருந்த தனிச்சிங்கள அரசகர்ம மொழித் தீர்மானத்தின் மீது 1944ஆம் ஆண்டு மே மாதம் விவாதம் நிகழ்ந்த போது அதில் தமிழ் மொழியும் அரசகர்ம மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று திருத்தங்கோரி உரையாற்றிய SWRD.பண்டாரநாயக்கா, தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும், அதன் இலக்கிய செழுமைப் பற்றியும், தமிழரின் பண்பாட்டுவளம் பற்றியும் மிகவும் அறிவுபூர்வமாக அதேவேளை அதில் பற்றுறுதியுடனும் எடுத்து விளக்கினார். அப்போது அங்கு தமிழ் மொழியின் முக்கியத்துவம் பற்றி பண்டாரநாயக்கா பேசியிருந்த பேச்சானது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கத்தக்கது (பார்க்க: Hansard 25May 1944)
அவ்விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது தமிழ் மொழிக்காக சிறப்பாக வாதம் புரியவல்ல சிங்கள இடதுசாரித் தலைவர்கள் பதுளைச் சிறையில் இருந்தனர். குறிப்பாக 1942ஆம் ஆண்டு டாக்டர் என்.எம்.பெரேரா இந்தியாவில் உள்ள அஹமதாபாத்தில் கைது செய்யப்பட்டு அங்கு 15 மாதங்கள் சிறைவைக்கப்பட்ட பின் அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பதுளைச் சிறையில் ஏனைய சிங்கள இடதுசாரித் தலைவர்களுடன் அடைக்கப்பட்டிருந்தார். ஆதலால் இடதுசாரித் தலைவர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் சிங்களத் தரப்பில் இருந்து பண்டாரநாயக்காவின் பேச்சு மட்டுமே நீதியினதும், அறிவினதும்பால் பிரகாசமாய் ஒலித்தது.
ஆனால் இதே பண்டாரநாயக்கா தனது முன்னைய நிலைப்பாட்டிற்கு மாறாக 1950களின் மத்தியில் தலைகீழ் மாற்றத்திற்கு உள்ளானார். அவர் ஏன், எவ்வாறு தலைகீழாக மாறினார் என்பதற்கான விளக்கத்தை சரிவரக் கண்டறிய வேண்டியது அவசியம்.
சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துடன் அரசகர்ம மொழிகளாக வேண்டும் என்ற மசோதாவை 1955ஆம் ஆண்டு டாக்டர். என்.எம்.பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து ஆற்றிய உரையானது இதுவரை ஒப்பிடற்கரிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக இன்றும் காணப்படுகிறது (பார்க்க: Hansard 19 – 21 Oct. 1955). குறிப்பாக 1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்படி மசோதா மீதான விவாதத்தின் போதும், 1956ஆம் ஆண்டு சூன் மாதம் நாடாளுமன்றத்தில் பண்டாரநாயக்கா சமர்ப்பித்திருந்த தனிச்சிங்கள மசோதா மீதான விவாதத்தின் போதும் டாக்டர். என்.எம்.பெரேரா, டாக்டர். கொல்வின், ஆர்.டி சில்வா, பெர்னார்டு சொய்சா, எட்மென்ட் சமரகொடி, பீட்டர் கெனமன் போன்ற சிங்கள இடதுசாரித் தலைவர்கள் ஆற்றிய உரைகள் தமிழ்த் தலைவர்களின் உரைகளைவிடவும் அதிகம் புத்திபூர்வமானவையாகவும், தரமானவையாகவும், திறமையானவையாகவும் காணப்பட்டன (பார்க்க: Hansard 5 – 14 June 1956).
உள்ளூராட்சிச் சபைகளிலும், கிராம நீதிமன்றங்களிலும் உத்தியோக மொழிகளாக சிங்களமும், தமிழும் இருக்க வேண்டுமென்று 1937ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க சபையில் முதல் முறையாக பிரேரணை கொண்டுவந்திருந்தவரும் இலங்கையில் மார்க்சியத்தின் தந்தையென்று வருணிக்கப்பட்டவருமான அதே பிலிப் குணவர்த்தன 1950களின் மத்தியில் இதற்கு நேர்எதிர்மாறான நிலைப்பாட்டையெடுத்து தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென்று பெரிதும் வாதிடுபவராக மாறினார்.
அதேபோல சிங்களமும், தமிழும் உத்தியோக மொழிகளாக ஆக்கப்பட வேண்டுமென மேற்படி அதிகம் சிறப்புடன் வாதிட்ட சிங்கள இடதுசாரித் தலைவர்களும் அடுத்த பத்தாண்டுக்குள் தமது முன்னைய நிலைப்பாட்டிற்கு நேரெதிர்மாறான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக மாறினர்.
1944ஆம் ஆண்டு தமிழ் மொழியும் அரசகர்ம மொழியாக வேண்டும் என்பதற்காக சிறப்புடன் வாதிட்ட அதே பண்டாரநாயக்காதான் தனிச்சிங்கள சட்டத்தை நாடாளுமன்றத்தில் 1956ஆம் ஆண்டு முன்மொழிந்து நிறைவேற்றினார். அப்படியே இலங்கையின் மார்க்சிசவாதத் தந்தை பிலிப் குணவர்த்தனாவும் ஏற்கனவே தலைகீழா மாறியிருந்தார். தமிழ் மொழிக்காக 1950களின் மத்தியில் பெரிதும் வாதிட்ட சிங்கள இடதுசாரிகளும் அதன்வழியில் இறுதியாக மாறினர். குறிப்பாக தமிழ் மக்களின் உரிமைகளுக்கு முற்றிலும் எதிர்மாறான முதலாவது குடியரசு அரசியல் யாப்பை 1972ஆம் ஆண்டு உருவாக்குவதில் மேற்படி இடதுசாரித் தலைவர்கள் முன்னணிப் பாத்திரம் வகித்தனர்.
‘மொழி ஒன்று என்றால் நாடு இரண்டு, மொழிகள் இரண்டு என்றால் நாடு ஒன்று’ என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை முன்வைத்திருந்த டாக்டர் கொல்வின் ஆர். டி சில்வாதான் வெறும் சாதாரண சட்டமாக இருந்த தனிச்சிங்களச் சட்டத்தை 1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டமாக தரம் உயர்த்தும் அரசியல் யாப்பை எழுதினார்.

குறிப்பாக 1965ஆம் ஆண்டின் பின் சுதந்திர கட்சியுடன் மேற்படி இடதுசாரிகள் கூட்டணி அமைக்கப் புறப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது மொழியினக் கொள்கையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. தமிழர்களின் உணவுப் பழக்கத்தை கிண்டல் செய்து இழிவுபடுத்தும் வகையில் ‘தோசே மசால்வடே அப்பிட்ட எப்பா’ என்று 1966ஆம் ஆண்டு மேதின ஊர்வலத்தின் போது மேற்படி சிங்கள இடதுசாரிகள் சிங்களத்தில் கோஷம் எழுப்பினர். அதாவது தோசை மசாலாவடை உண்ணும் தமிழர் எமக்கு வேண்டாம் என்பதே இதன் பொருளாகும்.
பண்டாரநாயக்காவும் மேற்படி சிங்கள இடதுசாரித் தலைவர்களும் அநேகமாக மேற்குலகம் சென்று உயர்கல்வி பயின்றவர்களாகவும் நவீன மனப்பாங்கு கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். இதனால் பண்டைய வக்கிரமடைந்த வரலாற்றை மீறி ஒரு நவீன வரலாற்றை உருவாக்கலாம் என்ற எண்ணம் அவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைமுறை என்பனவற்றிற்கு ஊடாக உருவாகியிருந்ததை ஆரம்பத்தில் காணமுடிந்தது. இதனால் இவர்கள் புதிய மாற்றத்தைப் பற்றியும் இனஐக்கியம் கொண்ட ஒரு புதிய பல்தேசியயின தேசத்தை உருவாக்குவதைப் பற்றியும் சிந்திக்கக்கூடியவர்களாக இருந்தனர்.
தொடரும்…