ஈழத்திலுள்ள தமிழ் மக்களிடையே பாகுபாட்டினை தோற்றுவிக்கவேண்டாமென தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிம் பிரபல நடிகரும் கவிஞருமான வ.ஜ.ச.ஜெயபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பினில் அவர் சிறீதரனிற்கு பகிர்ந்துள்ள தகவலில் பத்திரிகையாளர் ஒருவருக்கும் உங்களுக்குமிடையில் இடம்பெறும் சம்பாசனையொன்று இணையத்தில் உலாவுகிறது. அதில் நீங்கள் மலையக வம்சாவழி ஈழத் தமிழர்களை குறிப்பிட பயன்படுத்தும் ‘வடக்கத்தையான்’ என்கிற ஒரு சொல் அதிர்ச்சி தருகிறது. இது எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத இழிவு செய்யும் சொல்லாகும். வாய்தடுமாறி அச்சொல் வந்திருக்கலாம். தயவு செய்து மலையக வம்சாவழி ஈழத் தமிழருக்கு வருத்தம் தெரிவித்து அச்சொல்லை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொள்கிறேனென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் நண்பா, வன்னி மண்ணை வளப்படுத்தும் முன்னணி உழைப்பாளர்களான மலையக வம்சாவழி ஈழத்தமிழர்களை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லும் உங்கள் கடமையை முன்னிலைப் படுத்திச் செயல்பட வேண்டுகிறேனெனவும் வ.ஐ.ச.ஜெயபாலன் கோரியுள்ளார்.
Add Comments