தமிழ் மக்கள் பேரவையை பார்த்து த.தே.கூ அச்சப்படவில்லை என்கிறார் சுமந்திரன்

தமிழ் மக்கள் அவை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அச்சப்படவில்லை மாறாக தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை பின் கதவு வழியாக முன்கொண்டு வருவதற்கு முயல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை  தொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தொடர்பாக கருத்து வெளியிடடுள்ள அவர்,

குறித்த அவை தொடர்பாக கூட்டமைப்பு அச்சப்படவில்லை. அவ்வாறான தேவையும் எமக்கு கிடையாது. ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்ட தங்கள் அரசியல் கொள்கைகளுடன் இவ்வாறான அவைகளுக்கு பின் கதவு வழியாக நுழைய நினைப்பது ஜனநாயகத்திற்கு மாறானது என்பதை சுட்டிக்காட்ட எமக்கு உரிமை உண்டு.
ஏனெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் கூறுகின்றோம்.
முதலமைச்சர் இதில் அங்கம் வகிப்பது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,
முதலமைச்சர் மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்தே தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் அந்த அரசியல் நிலைப்பாட்டுக்கு மாறாகவே செயற்பட்டதுடன் மக்களை குழப்பும் செயற்பாட்டையும் முன்னெடுத்தார்.
ஆனால் மக்கள் குழப்பமடையாமல் தெளிவாக தங்கள் ஆணையை வழங்கினார்கள். எனவே முதலமைச்சர் அல்ல கூட்டமைப்பின் எந்த தலைவரும் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்பட்டால் அவர்களை மக்கள் அங்கீகரிக்கப்போவதில்லை.
இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்கட்சி தலைவரான பின்னர் யாழ்ப்பாணம் வந்து உயர்பாதுகாப்பு வலயத்தை பார்வையிட்டார்.
இதன் பின்னர் கொழும்பில் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்தபோது வலி, வடக்கில் படையினர் பயன்படுத்தாமல் பல நிலங்கள் பற்றைகள் வளர்ந்து கிடப்பதை நேரில் பார்த்ததாக கூறியதுடன் அவை விடுவிக்கப்படவேண்டும் என கேட்டுக் கொண்டோம்.
இதன்போது இவ்வாறான காணிகளை விடுவிப்பதற்காக நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி கூறியிருந்தார். இதனை தொடர்ந்து யாழ்.வந்த ஜனாதிபதி வலி,வடக்கு மக்களை சந்தித்து அவர்களுடைய நிலையை பார்த்துள்ளார்.
இதன் பின்னரே 6 மாதங்களில் காணிகளை விடுவிப்பேன் எனவும் தென்னிலங்கையில் இருந்து கொண்டு இனவாதம் பேசாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.
எனவே ஜனாதிபதி எமக்கும் தமிழ் மக்களுக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என நம்புகிறோம்.
சிறிது காலத்தில் ஒரு தொகை நிலம் விடுவிக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக மற்றைய நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும் நாங்கள் நம்புவதுடன் அதற்கான அழுத்தங்களை கூட்டமைப்பு தொடர்ந்து கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையில் சம்பந்தனை இணைத்துக்கொள்வது தொடர்பில் நாளை முடிவு!

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila