மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் நேற்று கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் தன்னிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு இன்று காலை விளக்கமளித்தார், “கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரினால் இரண்டாவது தடவையாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் நேற்று விசாரணைக்காக சென்றிருந்தேன். இதன்போது, விசாரணையை மேற்கொண்டவர்கள் முற்றிலும் முரண்பாடான, பொருத்தப்பாடற்ற விடயங்களை விசாரணையின் போது முன்வைத்திருந்தார்கள். கடந்த வருடம் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டமை, அதனை தொடர்ந்து மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அனுஷ்டிப்பு நிகழ்வு நடத்தியமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.அதற்கு மாறாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் போக்கை நலிவுப்படுத்துகின்ற விடயமாகவும், விடுதலைப்புலிகளின் கருத்தியல் போக்கை வலுப்படுத்துகின்ற வகையிலும் பயங்கரவாதத்தினை தூண்டுகின்ற விதத்திலும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் கருத்து தெரிவிப்புக்களும் என்னால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். அத்துடன், பொலிஸ்மா அதிபரின் வேண்டுகைக்கு அமைவாக குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் அரசுக்கு எதிரான மற்றும் அரசிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வுகளை மேற்கொண்டால் தாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டனர் என தெரிவித்துள்ளார். |
பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக சிவகரன் மீது குற்றச்சாட்டு!
Related Post:
Add Comments