வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் புதிய அரசியல் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை மணிக்கூடு கோபுர சந்தியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. தேசிய விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் காலை 10.45 மணிக்கு ஆரம்பமாகி, 11.45 மணியளவில் முடிவடைந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிராகவும் மற்றும் எதிர்கட்சி தலைவர், பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
|