இந்த அனர்த்தம் கிழக்கு லண்டனில் இன்று காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை மோதிச் சென்ற பேருந்தை நிறுத்துமாறு சாரதியிடம் பயணிகள் மன்றாடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் பேருந்தை நிறுத்துமாறு கூறிய போதிலும் சாரதி பேருந்தை நிறுத்தாமல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தின் போது பேருந்தில் இருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது காரில் இருந்த குழந்தை ஒன்று அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த பேருந்தின் சாரதி இன்னும் கைது செய்யப்படவில்லை.
பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது சாரதி வேண்டும் என்றே நடந்து கொண்டாரா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.