வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியில் இன்றைய தினம்(05) புலமைப்பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த விழாவை பற்றிய விமர்சனங்களை பழைய மாணவர்களின் முகநூல் பக்கத்தில் பார்க்க கூடியதாக இருந்தது.
குறித்த விபுலானந்த கல்லூரியானது சில வருடங்களாக பல்வேறு விடயங்களில் குழப்பகரமான நிலையில் சென்றிருப்பதையும், அதனால் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒரு குழப்பம் உருவாகியிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
அரசியல்வாதிகளை அழைக்கக் கூடாது என்ற கருத்தை கேள்விப்பட்டேன். அவர்கள் எதைச் சாதித்தார்கள் அதற்கு நானும் உடன்படுபவனாக இருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதி என்றால் வாக்குறுதி வழங்கத்தான் வேண்டும். வழங்கவில்லை என்றால் ஏன் வழங்கவில்லை என்றும் மக்கள் ஏற்றுக் கொள்ள கூடியளவிற்கு சொல்ல வேண்டும்.
முயற்சி எடுக்கின்றோம் என்று சொல்லி விட்டு செல்கின்றார்கள். ஆனால், என்ன கட்டத்தில் இருக்கிறது. என்ன முடிவு எடுத்தார்கள் என்பது தெரியாது.
தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் ஐயா வரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் தீர்வு தான் இல்லை.
தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத மக்களுக்கு அரசியல் உரிமையை பெற்றுக்கொள்ள முடியாத அரசியல் தலைவர்களாக தான் இதுவரையும் இருக்கின்றார்கள்.
அது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், தலைவர்களாக இருக்கலாம் எல்லோருக்குமே இது பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் என்பது தவிர்க்க முடியாதது. இன்று அரசியல் தேவை. ஆனால், அரசியலில் யார் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் நீங்களாக இருக்க வேண்டும்.
அது தான் இங்கு முக்கியம். அதிலே நீங்கள் தவறு செய்தால் தவறான வழியிலே சென்று கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.