கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

கீதா குமாரசிங்க இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கத் தகுதி யுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இன்று குறித்த மனு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப ட்ட போதே இந்த தீர்ப்பு தெரிவாகி யுள்ளது. 

கீதா குமாரசிங்கவுக்கு இரட்டைக் குடி யுரிமை இருப்பதால், இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாதென, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்து ள்ளது. 

இதனையடுத்து, இத் தீர்ப்பை எதிர்த்து கீதா குமாரசிங்க உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந் நிலை யில், இரட்டைக் குடியுறிமையுடன் கீதா இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பின ராக முடியாதென உயர்நீதி மன்றமும் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila