தமிழரசு தனிநபர் அரசாகின்றது?


suma

தமிழரசுக்கட்சியில் அசைக்க முடியாத செல்வாக்குடன் எம்.ஏ.சுமந்திரன் பரிணமித்துவருகின்ற நிலையில் பெயரளவில் இருந்துவருகின்ற மத்தியகுழுவிலிருந்து விலக பலரும் முடிவு செய்துள்ளனர். யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக தனது ஆதரவாளரான இம்மானுவேல் ஆர்னோல்ட்டை சுமந்திரன் முன்னிறுத்தி வெற்றி பெற்றுள்ளார். இவ்விடயத்தில் எம்.ஏ.சுமந்திரனின் அதிகப்படியான தலையீட்டுடன் நேற்று இந்த தீர்மானத்தை தமிழரசுக்கட்சி எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.
குறிப்பாக மத்திய குழுவின் எவரது கருத்தையும் பொருட்படுத்தாது முழு அளவில் தனது அழுத்தங்களை பிரயோகித்தே சுமந்திரன் ஆனோல்ட்டை கொண்டுவந்துள்ளார்.
ஏற்கனவே தனது ஆதரவு சயந்தனை தென்மராட்சியில் முழு அளவில் களமிறக்கி மத்திய குழுவை சேர்ந்த அருந்தவபாலனை புறமொதுக்கி சுமந்திரன் வெற்றி பெற்றிருந்தார்.
முன்னதாக மாநகர முதல்வர் போட்டியிலிருந்த ஜெயசேகரத்தை போட்டியிலிருந்து ஒதுங்கும்படி அழுத்தங்கள் வழங்கப்பட்டு களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதேபோன்று தனது மைத்துனான ஊடகவியலாளர் ந.வித்தியாதரனை மூக்குப்போனாலும் சகுனப்பிழை தத்துவத்துடன் ஈ.சரவணபவன் வெளியே தள்ளிவிழுத்தினார்.
அடுத்த முதலமைச்சர் கதிரை கனவிலிருக்கும் சீ.வீ.கே.சிவஞானம் அதற்கு ஆட்சேபணை தெரிவித்த போதும் அவரது கருத்து ஒரு பொருட்டாகவே எடுக்கப்படவில்லை. அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் தனது வெற்றிக்கு பாடுபட்டவகையில் ஆனோல்ட் மாநாகரசபை முதல்வராகலாமென மூன்று வருடங்களின் முன்னரே வாக்குறுதி கொடுத்து விட்டதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சொலமன் சிறில்,ந.வித்தியாதரன் மற்றும் ஜெயசேகரம் உள்ளிட்டவர்கள் தேர்தல் பணிகளை புறக்கணிக்க முற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila