திருகோணமலை மாவட்டத்தில் வடமாகாணத்தில் உள்ள குச்சவெளி நிர்வாகப் பிரிவின் பிரதேச செயலகம், இந்த வாரம் இலங்கை ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கபட்ட பணிப்புரையொன்றையடுத்து திண்டாடிவருகின்றது. திருகோணமலைக்கு கிழக்காக கடற்கரை வழியே கொக்குளாயிலிருந்து திருகோணமலை வரை வடக்கே 1,800 ஏக்கர் நிலப்பகுதியும், அதன் இரசாயன தொழல் சாலையொன்றிற்காக இலங்கை அரசினால் முழுக்க கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை ஜங்கிள் பீச் ரிசோர்ட் எனும் விடுதியையும் அரச ஆதரவுடன் சிங்களவர்கள் அமைத்துள்ளனர். திருகோணமலை நகரிலிருந்து 22 கி.மீ. வடக்கே திரிகோணமலை –புல்மோட்டை நெடுஞ்சாலையில்,இறக்கண்டி பாலத்திற்கும் இடையில் 22 கி.மீ தூரத்தில் கும்புறுப்பிட்டியில் இது அமைந்துள்ளது.